டாப் 10 சிறந்த சைக்கோ திரில்லர் படங்கள்.. வசூல் மழையால் செகண்ட் இன்னிங்சை தொடங்கிய ராட்சசன்

தென்னிந்திய சினிமாவில் கமர்சியல் மற்றும் ஆக்சன் படங்களின் வரிசையில் சைக்கோ திரில்லர் படங்களும் இடம் பிடித்துள்ளது. இந்த மாதிரியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. அதிலும் விஷ்ணு விஷால் சைக்கோ திரில்லர் படமான ராட்சசன் படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிசை துவங்கி வசூல் மழையில் நனைந்தார்.

கோப்ரா: இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் வெளிவந்த இப்படத்தில் விக்ரம் உடன் ஸ்ரீநிதி செட்டி, மியா ஜார்ஜ், பத்மப்ரியா, கே எஸ் ரவிக்குமார், இஃப்ரான் பதான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தில் பிரபல துருக்கிய அதிகாரி ஒருவர், மிக உயர்ந்த அதிகாரத்தில் உள்ள தலைவர்களின் தடயங்கள் அற்ற கொலைகளை அரங்கேற்றும் குற்றவாளியை தேடுகின்றனர்.

கோப்ரா செய்யும் கொலைகளின் உண்மையான நோக்கத்தை கண்டுபிடிப்பதை இப்படத்தின் கதை கருவாகும். இதில் விக்ரம் விதவித கெட்டப்பில் மிரட்டி இருப்பார். ஆகையால் டாப் 10 சிறந்த சைக்கோ படங்களின் லிஸ்டில் கோப்ரா 6-வது இடத்தை பிடித்து உள்ளது.

Also Read: விக்ரமை மொத்தமாக சாய்த்த அந்த ஒரு படம்.. குப்புற விழுந்தவர் இன்னும் மீள முடியவில்லை

இமைக்கா நொடிகள்: 2018 ஆம் ஆண்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராசிக் கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ருத்ரா என்ற மர்ம நபரால் ஏற்படும் கொலைகளை காவல்துறை அதிகாரியாக இருந்து கண்டுபிடிக்கும் நயன்தாரா குற்றவாளியை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதைக் கொண்டு விறுவிறுப்பான கதை களத்தையும் அதிரடி கலந்த காதல் படமாகவும் அமைந்துள்ளது. ஆகையால் டாப் 10 சிறந்த ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த மர்மம் நிறைந்த படத்தில் 5-வது இடத்தில் உள்ளது.

நானே வருவேன்: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் ஆகும். இதில் தனுஷ் உடன் இந்துஜா, பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் வில்லனாகவும் ஹீரோவாகவும் வித்தியாசம் காட்டி நடித்து இருப்பார். இதன் முதல் பாதி ரசிக்க கூடிய விதத்திலும் இரண்டாம் பாதி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தாத வகையில் பலவீனமான திரை கதைகளைக் கொண்டு உள்ளது. ஆகையால் டாப் 10 சிறந்த சைக்கோ படங்களின் லிஸ்டில் 4-வது இடத்தை பிடித்துள்ளது .

அந்நியன்: 2005 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பெரும் பொருள் செலவில் எடுக்கப்பட்ட இதில் விக்ரமுடன் பிரகாஷ்ராஜ், சதா மற்றும் விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்ரம் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் எப்படி இருப்பார். மேலும் இதில் ஒழுக்கமின்மை நோயினை மையமாகக் கொண்ட கதைக்களம் ஆகும். இத்திரைப்படம் 26.38 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும். ஹாரர் படங்களின் 3-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விஷ்ணு விஷாலுக்கு திருப்புமுனையாக அமைந்த 5 படங்கள்.. சரியான கம்பேக் கொடுத்த ராட்சசன்

ஸ்பைடர்: 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ராகுல் ப்ரீத்தி சிங், பரத், எஸ் ஜே சூர்யா, நதியா, ஆர் ஜே பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. கொலையாளியாக உள்ள எஸ்ஜே சூர்யா மற்றும் பரத் இவர்களின் மன நிம்மதிக்காக கொலை செய்கின்றனர்.

இதனை தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மகேஷ்பாபு எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதை படத்தின் கதையாகும். படத்தின் இசை மூலம் திரில்லர் ஆன அனுபவத்தை காட்டுகிறது ஸ்பைடர் திரைப்படம் திரில்லர் படங்களின் வரிசையில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

ராட்சசன்: 2018 ஆம் ஆண்டு இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளியான ஒரு திரில்லர் படமாகும். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் கொலையாளியை கண்டுபிடிக்கும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கிறிஸ்டோபர் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. படத்தில் சுவாரசியமான நிகழ்வுகளும் எதிர்பார்ப்பும் நிறைந்த கதைக்களமாக அமைந்துள்ளது. இப்படம் ஹாரர் திரில்லர் படங்களின் வரிசையில் முதலிடம் வகிக்கிறது.

Also Read: 2 சூப்பர் ஹிட் படங்களை மிஸ் பண்ணிய பரத்.. இன்றுவரை நொந்து நூடுல்ஸ் ஆகி விடும் கண்ணீர்

இந்த வரிசையில் தமிழ் படங்களை தொடர்ந்து பிற மொழி படங்களான மெமரிஸ், ஹிட், ஃபாரின்ஸ், அஞ்சாம் பத்ரா போன்ற படங்களும் ஹாரர் திரில்லர் படங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது. ராட்சசன் படம் முதலிடம் பிடித்திருப்பது தென்னிந்திய சினிமாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது.

Next Story

- Advertisement -