சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கண்ணம்மாவிற்கு செக் வைத்த பிக் பாஸ்.. போரிங் கண்டஸ்டண்ட் என போட்ட அரெஸ்ட் வாரண்ட் 

Bigg Boss 7 Promo: மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த வாரம் 7 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.  இதில் ஐந்து போட்டியாளர்கள் முதலில் தேர்வாகி அதன் பின்பு விசித்ரா, யுகேந்திரன் இருவரும் விதி மீறலால் ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு சென்றார்கள்.

இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு யார் செல்லப் போகிறார்கள் என்பதை நேற்று கேப்டன் தேர்வு செய்து அனுப்பி வைத்தார். ஆனால்  கடந்த வாரம் முழுவதும்  மக்களை எண்டர்டெயின்மென்ட் செய்யாமல் போரிங் கண்டஸ்டண்ட் என இரண்டு போட்டியாளர்களை குறிப்பிட்டு அவர்களை அரெஸ்ட் வாரண்ட் செய்துவிட்டனர்.

Also Read: பிரதீப் சைக்கோ கூட இருக்கிறது எனக்கு பாதுகாப்பா இல்ல.. பாவாவை அடுத்து வெளியேறும் பெண் போட்டியாளர்

அந்த இரண்டு நபர்களும் இப்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல போகின்றனர். அதில்  ஒருவராக தான் கண்ணம்மாவாக சின்னத்திரை ரசிகர்களிடம் பரீட்சியமான வினுஷா தேவி சிக்கிக்கொண்டார். ஏற்கனவே கடந்த வாரம் முழுவதும் அவர் ஸ்மால் பாஸ் வீட்டில் தான் இருந்தார்.

இந்த வாரம் தான் நிம்மதி பெருமூச்சு விட்டு பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கப் போகிறோம் என மனக்கோட்டை கட்டி இருந்தார். ஆனால் இப்போது பிக் பாஸ் அதை தூள் தூளாக உடைத்தெறிந்து வினுஷா தேவி மற்றும் அக்ஷரா இருவரையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு  அனுப்பிவிட்டார்.

Also Read: இந்த வார நாமினேஷனில் வசமாக சிக்கிய 3 போட்டியாளர்கள்.. அதிகமா கார்னர் செய்யப்பட்ட அமுல் பேபி

இந்த  அறிவிப்பு அடங்கிய ப்ரோமோ தற்போது வெளியாகி நிகழ்ச்சியின் சுவாரசியத்தை  மிகைப்படுத்தியது. அதிலும் இதை சொன்னதும் அந்த 2 போட்டியாளர்களுக்கு செம ஷாக் ஆனது. ஆனால் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விஷ்ணு உள்ளிட்ட பிற போட்டியாளர்கள் கைதட்டி சந்தோசமாக ஆரவாரம் செய்தனர்.

இது அக்ஷயாவிற்கு சுத்தமாகவே பிடிக்கல. அவர் தனியாக சென்று கேமரா முன்பு தேம்பி தேம்பி அழுகிறார். இதனாலேயே ஸ்மால் பாஸ் வீட்டில் நிச்சயம் கலவரம் வெடிக்கும். அமைதியாக இருந்தால் ‘ஏரி மிதிச்சு, தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்’ இனிவரும் நாட்களில் அக்ஷயா மற்றும் வினிஷா தேவி இருவரும் தங்களது நிஜ முகத்தை காட்டப் போகின்றனர்.

இன்று அதிரடியாக வெளியான பிக் பாஸ் ப்ரோமோ!

Also Read: பொறுப்பில்லாமல் திரிஞ்சா கடைக்குட்டியா இது.? பிக் பாஸில் சூதானமாக விளையாடி 2வது வாரமே பிடித்த கேப்டன்ஷிப்

- Advertisement -

Trending News