புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இந்த வார நாமினேஷனில் வசமாக சிக்கிய 3 போட்டியாளர்கள்.. அதிகமா கார்னர் செய்யப்பட்ட அமுல் பேபி

BB 7 Nomination List: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் நிறைய புதுமைகளை காட்டி வருகிறது. இரண்டு பிக் பாஸ் வீடு, பெரிய பிக் பாஸ் சின்ன பிக் பாஸ், முதல் வாரமே எலிமினேஷன் என கால் வைக்கும் இடம் எல்லாம் கன்னிவெடி என்பது போல் தான் சீசனை பரபரப்பாக நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும் கடந்த வாரம் முதல் எவிக்ஷனாக அனன்யா ராவ் வெளியேறி இருக்கிறார்.

கமலஹாசன் தொகுத்து வழங்கும் இரண்டு எபிசோட்கள் முடிந்த நிலையில், வழக்கம்போல திங்கட்கிழமை சரவெடியாக ஆரம்பித்து இருக்கிறது பிக் பாஸ் வீட்டில். இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸின் கடைக்குட்டி சரவண விக்ரம் தான் கேப்டனாக தேர்வாகி இருக்கிறார். கண்ணன் கேரக்டரில் நடித்த இவரை இதுவரைக்கும் சீரியஸ் கதாபாத்திரத்தில் நாம் பார்த்ததே இல்லை. இவர் கேப்டனாக எப்படி இந்த வாரத்தை கொண்டு போகப் போகிறார் என்பது எல்லோருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Also Read:பொறுப்பில்லாமல் திரிஞ்சா கடைக்குட்டியா இது.? பிக் பாஸில் சூதானமாக விளையாடி 2வது வாரமே பிடித்த கேப்டன்ஷிப்

திங்கட்கிழமை ஆரம்பித்து விட்டால் எப்படி யார் கேப்டன் என ஆர்வம் பற்றிக் கொள்கிறதோ, அதேபோன்றுதான் யார் நாமினேஷன் என்பதிலும் அதிக ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுவிடும். அப்படித்தான் இந்த வாரமும் எவிக்சன் செய்வதற்கான நாமினேஷன் லிஸ்ட் ரெடி ஆகி இருக்கிறது. இதில் ஹவுஸ் மேட்சுகள் பெரும்பாலானோர் இந்த மூன்று பேரை அதிகமாக டார்கெட் செய்து இருக்கிறார்கள்.

பெண் ரசிகைகளின் ஃபேவரிட் ஆன அமுல் பேபி விஷ்ணு தான் அதிகமான நபர்களால் நாமினேட் செய்யப்பட்டு இருப்பது. அவரே தன் வாயால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் எல்லோரும் தன்னை கார்னர் செய்வதாக சொல்லி இருக்கிறார். அதிலும் விஷ்ணு இன்றைய முதல் பிரமோவில் தன்னுடைய சாக்லேட் பாய் அவதாரத்தில் இருந்து வெளிவந்து ரவுடிசம் செய்திருக்கிறார். இந்த நாமினேஷனுக்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.

Also Read:டிஆர்பியில் பெருத்த அடி வாங்கிய விஜய் டிவி சீரியல்.. மட்டமாக உருட்ட போகும் செகண்ட் பார்ட்

விஷ்ணுவை தொடர்ந்து அடுத்தடுத்து அக்ஷயா மற்றும் மாயாவை அதிகமான ஹவுஸ் மேட்ஸ் நாமினேஷன் செய்திருக்கிறார்கள். அதிலும் ரவீனா, மாயா இல்லாத பிக்பாஸ் வீடு நன்றாக இருக்கும் என்ற வேறு சொல்லி இருக்கிறார். இவர்கள் மூன்று பேரில் ஒருவர் தான் அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். இதில் கண்டிப்பாக விஷ்ணு எஸ்கேப் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது.

மேலும் இந்த வார எபிசோடுகளை இன்ட்ரஸ்டிங்காக கொண்டு போகும் அளவிற்கு சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு போனவர்களின் லிஸ்ட் இருக்கிறது. கேப்டன் சரவண விக்ரம் தன்னை பெரிதும் கவராதவர்கள் என்ற வரிசையில் பவா செல்லதுரை, விஷ்ணு விஜய், விஜய் வர்மா, கூல் சுரேஷ், ஐஷு, மாயா மற்றும் பிரதீப் ஆகியோரை தேர்வு செய்திருக்கிறார். இதில் பவா செல்லதுரை இன்று தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தெரிகிறது.

Also Read:விஜய் டிவி மானமே உங்க கையில தான் இருக்கு.. 18 போட்டியர்களின் சம்பள விவரத்தை கசிய விட்ட பிக்பாஸ்

- Advertisement -

Trending News