பிரதீப் சைக்கோ கூட இருக்கிறது எனக்கு பாதுகாப்பா இல்ல.. பவாவை அடுத்து வெளியேறும் பெண் போட்டியாளர்

Bigg Boss Season 7 Contestants: பிக் பாஸ் சீசன் 7 மற்ற சீசன்களை காட்டிலும் ரொம்பவே வித்தியாசமா இருக்கு. இதனால் போட்டியாளர்களுக்கு அதிகமான அழுத்தம் கொடுப்பது போல் தோன்றுகிறது. ஒரு வாரம் நிறைவடைந்து 2வது வாரத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் பிக் பாஸ்  போட்டியாளர்களால் ஜாலியாக இருக்க முடியவில்லை. அதிலும் போட்டியாளர்களுக்குள் இருக்கும் வன்மம், ஒருவர் மற்றவரை குறை சொல்வது யாரை வெளியேற்ற வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு சூழ்ச்சி செய்வது என பிக் பாஸ் வீடே நெகட்டிவிட்டியாக  இருக்கிறது.

இதனால் இந்த வீட்டில் இன்னும் ஒரு நிமிஷம் கூட நான் இருக்க முடியாது என்று பவா செல்லதுரை உறுதியாக முடிவெடுத்து வீட்டில் விட்டு வெளியேறுகிறார். அதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சிக்கு ஜாலியா என்ஜாய் பண்ண வேண்டும் என்று வந்தேன், ஆனால் இங்கு நடப்பது எதுவுமே சுத்தமா பிடிக்கல. அதிலும் குறிப்பாக கவினின் நெருங்கிய நண்பராக இருக்கக்கூடிய பிரதீப் அவ்வபோது நடுராத்திரியில எந்திரிச்சு உட்கார்ந்துகிட்டு ஏதேதோ செய்கிறார்.

Also read: இந்த வார நாமினேஷனில் வசமாக சிக்கிய 3 போட்டியாளர்கள்.. அதிகமா கார்னர் செய்யப்பட்ட அமுல் பேபி

சைக்கோ மாதிரி நடந்துக்கிற பிரதீப்புடன் ஸ்மால் பாஸ் வீடான சிறிய அறையில் இருப்பது பாதுகாப்பு இல்லாதது போல் தோன்றுகிறது. சமையலறையில் கத்தி கபடா எல்லாம் இருக்கு. அவர் பாட்டுக்கு என் மேல இருக்க கோவத்துல தூக்கி சொருகிட்டா, நான் என்ன பண்ணுவேன் என மாயா தனக்கு உயிர் பயம் வந்துவிட்டது என்று கன்ஃபிஷன் ரூமில் பிக் பாஸிடம் இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பும்படி கேட்கிறார். உடனே பிக் பாஸ் இந்த வீட்டில் உங்களுடைய பாதுகாப்புக்கு நான் பொறுப்பு.

பிக் பாஸ் டீம் தற்போது வீட்டில் இருக்கும் 17 போட்டியாளர்களையும் தனித்தனி நபர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவர்களுடைய மனநிலை என்ன எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனிக்கிறோம். அதனால் பயம் வேண்டாம், நீங்கள் இங்கே ஜாலியாக இருக்க தானே வந்தீர்கள் அதை செய்யுங்கள் என்று பிக் பாஸ் சொன்னார். உடனே மாயா கடந்த வார சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமல் சார் நிகழ்ச்சி செம ஜாலியாக இருக்கும் என நினைத்தேன்.

Also read: எதிர்பார்த்து ஏமாந்து வெளியேறிய அனன்யா.. ஒரு வாரத்திற்கு பிக் பாஸில் வாங்கிய சம்பளம்

ஆனால் அன்றுதான் எல்லோரும் ஒருவர் மீது ஒருவர் பழி போட்டு தங்களிடம் இருக்கும் டார்க் சைட்டை காட்டினார்கள். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் போகுமா? என்ற பயமும் வந்துவிட்டது என்று மாயா சொன்னார். உடனே பிக் பாஸ் முந்தைய சீசனின் வெற்றியாளரான ராஜு என்டர்டைன்மென்ட் செய்தே பிக் பாஸ் ரசிகர்களை மகிழ்வித்து டைட்டிலை தட்டி சென்றார். அவர் இந்த வீட்டில் என்ஜாய் பண்ண முடியவில்லை என நினைத்திருந்தால், ஒரு சீசன் கிடைத்திருக்குமா? நீங்கள் தான் உங்களுக்கு வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று மாயாவை பிக் பாஸ் சமாதானப்படுத்தினார்.

இந்த சீசன் துவக்கத்திலேயே இவ்வளவு விறுவிறுப்புடன் இருக்கிறதே என பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் இதற்குப் பின்னால் அங்கிருக்கும் போட்டியாளர்களை ப்ரீயா விடாமல் ஏகப்பட்ட விதிமுறைகளால் அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருப்பது தான் இப்போது மாயாவிற்கு பிரச்சனையாக இருக்கிறது. இதே நிலைமை நீடித்தால் இன்னும் அடுத்தடுத்த போட்டியாளர்களும் அதிரடியாக வீட்டை விட்டு வெளியேற தான் பார்ப்பார்கள்.

Also read: இனி ஒரு நிமிஷம் பிக் பாஸ் வீட்டில இருந்தா எனக்கு பைத்தியம் பிடிச்சிரும்.. தலை தெரிக்க ஓடிய கமலின் செல்லம்