சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பொறுப்பில்லாமல் திரிஞ்சா கடைக்குட்டியா இது.? பிக் பாஸில் சூதானமாக விளையாடி 2வது வாரமே பிடித்த கேப்டன்ஷிப்

Bigg Boss Season 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக முதல் வாரத்தை கடந்து விட்டது. அதுவும் இந்த சீசன் தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து சண்டையும், சர்ச்சையும் ஆகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் முதல் வாரத்தில் விஜய் வர்மா கேப்டன் ஆக இருந்தார்.

மேலும் கடந்த சீசன்களில் முதல் வாரம் எவிக்ஷன் இல்லாத நிலையில் இந்த சீசனில் முதல் வாரம் முதல் ஆளாக அனன்யா வெளியேறிவிட்டார். இந்நிலையில் இரண்டாவது வாரத்தில் கேப்டனாக யார் வரப் போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில் பொறுப்பில்லாமல் திரிந்த கடைக்குட்டி பதவியை பிடித்துவிட்டார்.

Also Read : டிஆர்பியில் பெருத்த அடி வாங்கிய விஜய் டிவி சீரியல்.. மட்டமாக உருட்ட போகும் செகண்ட் பார்ட்

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைக்குட்டி பிள்ளையாக இருந்தவர் கண்ணன். இந்த தொடரில் பொறுப்பில்லாமல் ஊதாரியாக தான் கண்ணனை பார்த்திருக்கிறோம். அதோடு மட்டுமல்லாமல் நிறைய ரீல்ஸ் வீடியோவும் இவர் வெளியிட்டு வந்திருக்கிறார்.

அந்த வகையில் ஒரு விளையாட்டு பிள்ளையாகத்தான் சரவண விக்ரம் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர் எதிராக மிகவும் திறமையாக மட்டுமன்றி சூதானமாகவும் விளையாடி வருகிறார். அதாவது மிகவும் அமைதியாகவும், ஒவ்வொரு விஷயத்தை நன்கு ஆராய்ந்து செயல்படுத்தி வருகிறார். இதுவரை எந்த கிசுகிசுவிலும் அவர் சிக்கவில்லை.

Also Read : இனி ஒரு நிமிஷம் பிக் பாஸ் வீட்டில இருந்தா எனக்கு பைத்தியம் பிடிச்சிரும்.. தலை தெரிக்க ஓடிய கமலின் செல்லம்

அதுவும் தலைவன் பொறுப்புக்கு வந்தவுடன் நிதானமாக செயல்பட்டு காயை நகர்த்தி வருகிறார். எப்போதுமே சேர்ந்து வெட்டி கதை பேசிக் கொண்டிருக்கும் மாயா மற்றும் பூர்ணிமா இருவரையும் முதல் வேலையாக பிரித்து விட்டுள்ளார். மேலும் விஜய் வர்மா, கூல் சுரேஷ், விஷ்ணு ஆகியோரை நிதானமாக கவனித்து வருகிறார்.

இந்த வாரம் சரவண விக்ரமின் முழு திறமையும் வெளிப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதோடு மட்டுமல்லாமல் விஷ்ணு சரவண விக்ரமை நேரடியாகவே கேப்டனுக்கு தகுதியில்லை என்று விவாதித்துள்ளார். அதற்கு தரமான பதிலடி கொடுக்கும்படி இன்றைய எபிசோடில் சரவண விக்ரம் சம்பவம் செய்வார் என எதிர்பார்க்கலாம்.

Also Read : ஜோவிகா எனக்கு பொறந்த பொண்ணு இல்ல.. புதுசா குண்டைத் தூக்கிப் போட்ட வனிதாவின் 2வது புருஷன்

- Advertisement -

Trending News