தமிழ் புதல்வன் தொடங்கி வட சென்னை வளர்ச்சி வரை.. தமிழக பட்ஜெட் 2024-25 இல் கவனிக்க வேண்டிய திட்டங்கள்

TN Budget 2024-25: தமிழக அரசின் 2024- 25 ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பட்ஜெட் உரை முடிந்து ஒரு சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் என்ற ஹேஷ் டாக் வைரலாக ஆரம்பித்தது. இந்த முறை தமிழக பட்ஜெட்டிற்கு நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி பாசிட்டிவ் விமர்சனங்களே அதிகமாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டது எல்லாமே நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என சாமானிய மக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த வருடத்திற்கான பட்ஜெட்டில் முக்கியமாக கவனிக்க வேண்டிய சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்கலாம்.

கவனிக்க வேண்டிய திட்டங்கள்

தமிழக அரசு தமிழ் புதல்வன் என்னும் திட்டத்தை தொடங்கி ஆறு முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை வழங்க திட்டமிட்டு இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களை வேலைக்கு அமர்த்தும் தொழிற்சாலைகளுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு டிசம்பர் மாதமும் மழை வெள்ளத்தால் தமிழ்நாடு தத்தளித்து வருகிறது. இது போன்ற இயற்கை பேரிடர்களை முன்பே கணித்து சொல்வதற்கான தொழில்நுட்பங்களுக்கு தமிழக அரசு இந்த வருடம் 32 கோடியை ஒதுக்கி இருக்கிறது. இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கான உச்சவரம்புத் தொகை ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சம் ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆட்டிசம் குழந்தைகளுக்கான உயர்திறன் பண்பாட்டு மையம் 25 கோடியில் அமைக்கப்பட இருக்கிறது.

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம், சென்னை- ஆவடி இடையே மெட்ரோ விரிவாக்கம் என சென்னை மாவட்டத்திற்கான மெட்ரோ பணி விரிவாக்கத்திற்கும் மட்டும் 12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. திருச்சி, கோவை, மதுரை மாவட்டங்களில் டைட்டில் பார்க் அமைக்கப்பட இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் தூத்துக்குடியை அடுத்து இருக்கும் குலசேகரன் பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது.

வெளி ஊரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்கும் பெண்களுக்கு தோழி விடுதி புதிதாக அமைக்கப்படுவதற்கு 26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அரசு பள்ளியில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 ரூபாய் கொடுக்கப்படுவது போல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து கல்லூரி போகும் கண்களுக்கும் கொடுக்கப்பட இருக்கிறது. மாற்றுப் பாலினத்தவரின் கல்லூரி கல்வி மற்றும் விடுதிக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும்.

முதலமைச்சரின் தாயுமானவர் என்னும் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களை மீட்டெடுப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இது மட்டுமில்லாமல் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கான்கிரீட் வீடு, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இலவச நிலம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது. மகளிர் உதவித்தொகை மற்றும் மகளிர் இலவச பயணத்திற்கும் சேர்த்து 600 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்