ரிலீசுக்கு முன்பே ஓரம் கட்டப்பட்ட துணிவு.. தில்ராஜு கொடுத்த தில்லானா பேட்டி

8 வருடங்களுக்குப் பிறகு வரும் பொங்கல் என்று விஜய், அஜித் படங்களான வாரிசு மற்றும் துணிவு நேருக்கு நேராக திரையரங்குகளில் மோதிக் கொள்வதால் இந்த வருட பொங்கல் ரணகளமாக இருக்கப் போகிறது. இதனால் வாரிசு மற்றும் துணிவு படத்தின் அப்டேட் மற்றும் பாடல்கள் வரிசையாக வெளியாகி ரசிகர்களின் ஹைப்பை ஏற்றி உள்ளது.

மேலும் துணிவு படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ்சும், வாரிசு படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை செவன் ஸ்கிரீன் நிறுவனமும் கைப்பற்றியது. இதனால் எந்தப் படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் என தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

Also Read: அஜித் பெருசா, விஜய் பெருசா சொல்றதுக்கு இவன் யாரு.. வாரிசு தயாரிப்பாளரை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்.!

அதிலும் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் அளித்த பேட்டியால் அஜித் ரசிகர்கள் சூடாகிவிட்டனர். தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன் நடிகர். ஆகையால் வாரிசு படத்திற்கு தான் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட வேண்டும் என தற்போது அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் உதயநிதியிடம் கேட்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

அதன்பின் அவரது பேட்டி வைரலான அடுத்த சில மணி நேரத்திலேயே முக்கிய நகரங்களான சென்னை, செங்கல்பட்டு, கோவை, நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு போன்ற பகுதிகளில் வாரிசு படத்தை திரையரங்கில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வாங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

Also Read: வாரிசு படத்தை பார்த்த பிரபலங்கள்.. கிளைமாக்ஸ்ல வம்சி வச்சாரு பாரு ட்விஸ்ட்!

இதற்கு பலர் தரப்பிலிருந்து கண்டனம் வெளியான நிலையில் ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் வாரிசு துணிவு படத்திற்கு தலா 400 திரையரங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது விஜயின் வாரிசு படத்திற்கு மட்டும் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

மேலும் படம் வெளியாவதற்கு 4 வாரத்திற்கு முன்பே புக்கிங் துவங்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து முழுவதும் வாரிசு படத்திற்கு மட்டும் 71 ஏரியாக்களில் 98 காட்சிகளை திரையிடப்பட முடிவு செய்திருக்கின்றனர். இதுவரை 250-க்கும் மேற்பட்ட டிக்கெட் விட்டு தீர்ந்திருக்கிறது. அதே நேரம் அஜித்தின் துணிவு படத்திற்கு 41 ஏரியாக்களில் மொத்தம் 41 திரைகள் மட்டுமே கிடைத்திருக்கிறதாம்.

Also Read: துணிவுக்கு பின்னால் இருக்கும் பெரிய பலம்.. வசூலில் பெரிய அடி வாங்க போகும் வாரிசு

அதேபோல் டிக்கெட் புக்கிங்களும் மிகக் குறைவாகவே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் அஜித்தின் துணிவு படத்திற்கான காட்சிகள், வாரிசு படத்தை விட மிகக் குறைவாக இருப்பதை அறிந்த தல ரசிகர்கள் காண்டில் உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்