அஜித் பெருசா, விஜய் பெருசா சொல்றதுக்கு இவன் யாரு.. வாரிசு தயாரிப்பாளரை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்.!

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களை நம்பி தான் இயங்கி வருகிறது. அந்த அளவிற்கு அவர்களுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். எப்பொழுதுமே இருமுனை போட்டி நிலவும் நடிகர்களுக்கு அதாவது ரஜினி-கமல் போட்டி போட்டு வந்தனர் ஆனால் நட்பாக பழகி வந்தனர். அதேபோல் கடந்த இருபது வருடங்களுக்கும் மேல் அஜித், விஜய் என்ற போட்டி ரசிகர் இடம் இருந்து வருகிறது அது வெறித்தனமாக இருந்து வருகிறது.

இதை வைத்து பல தயாரிப்பாளர்கள் கல்லா கட்டி வருகின்றனர். இந்த போட்டி ஒன்பது வருடங்களுக்கு மேல் அமைதியான நிலையில் இருந்த நிலையில் தற்போது பொங்கலன்று வாரிசு, துணிவு படம் மோதுவதால் தமிழ்நாட்டில் இந்த பிரச்சினை மட்டுமே தற்போது பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. என்னதான் பிரச்சனை இருந்தாலும் இங்கு உள்ள ரசிகர்களுக்குள் ஆரோக்கியமான பிரச்சினையாக இருந்த வந்த சமயத்தில்.

Also Read : வாரிசு ஹீரோ முதலில் விஜய் இல்லையாம்.. வாயை விட்டு வம்படியாக மாட்டிக் கொண்ட தில் ராஜு

தற்போது வாரிசு படத்தின் தயாரிப்பாளர் வம்சி இவர் தெலுங்கு திரையுலகில் பெரிய தயாரிப்பாளர். இதனால் இவர் தற்போது தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 அஜித் அதற்கு அப்புறம்தான் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் இதனால் விஜய்க்கு மட்டுமே பிசினஸ் அவருக்கு அதிக அளவில் தியேட்டர்கள் கொடுக்க வேண்டும் அஜித்திற்கு தியேட்டர்கள் குறைவாக கொடுக்க வேண்டும் என்று கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் விநியோகஸ்தர்கள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் இதற்கு பதில் வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவை பொருத்தவரை கதை மட்டுமே பெரிய ஹீரோவாக இருக்கும். இந்த வருடத்தில் அஜித், விஜய் படங்கள் வந்தாலும் பொன்னியின் செல்வன் மட்டுமே முதலில் வெற்றி பெற்றிருக்கிறது காரணம் அந்தப் படத்தின் கதை.
அதைப்போல் 5 வருடம் தோல்வியை மட்டுமே கொடுத்த கமல் திடீரென விக்ரம் படத்தின் மூலம் வெற்றி பெற்றார் அதற்கும் கதைதான் முக்கியம்.

Also Read : மோசமான கெட்டவனாக துணிவில் அஜித்தை பார்க்கலாம்.. வினோத் அப்டேட்டால் ஆடிப் போன கோலிவுட்

இங்கு கதை இல்லாமல் எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் படம் நஷ்டத்தை மட்டுமே அடையும் மக்கள் விரும்ப மாட்டார். இது தெரியாமல் தயாரிப்பாளர் வம்சி பேசியிருப்பது நகைச்சுவையாக இருக்கிறது. அஜித், விஜய் இத்தனை வருடம் போட்டி இருந்தாலும் இங்கு உள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அவர்களை இந்த அளவிற்கு அவர் பெரியவர் இவர் பெரியவர் என்று பேச மாட்டார்கள்.

வம்சி இப்படி பேசி இருப்பது தமிழ்நாட்டில் உள்ள சூழ்நிலை தெரியாமல் இங்கு உள்ள ரசிகர்களின் நிலை தெரியாமல் பேசி இருக்கிறார். இது கண்டனத்துக்குரியது. இதற்கான பதிலை விஜய் கண்டிப்பாக கூற வேண்டும். இல்லை என்றால் தமிழ் சினிமாவிற்கான மதிப்பு மற்ற மாநிலங்களில் உள்ள சினிமாக்காரர்கள் மூலம் கெட்டுவிடும் என்பது உண்மை நம்மை வைத்து கல்லா கட்ட நினைக்கும் மற்ற மாநில தயாரிப்பாளர்களுக்கு பதில் சொல்லும் வகையில் நடிகர்கள் செய்ய வேண்டும்.இதைத் தொடர்ந்து அனுமதிக்கவும் கூடாது என்று கூறியுள்ளார்.

Also Read : விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய ராஜமௌலி.. இந்தப் பாராட்டு அஜித்துக்கு மட்டும்தான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்