நயன்தாரா மீது உச்சகட்ட வெறுப்பில் இருக்கும் திரிஷா.. அதுக்குன்னு இப்படியா சொல்லுவீங்க மேடம்

ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை திரிஷா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருக்கும் அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

பிறகு இளம் நடிகைகளின் வரவால் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து போனது. அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த திரைப்படங்களும் தோல்வியை தழுவியது. இதற்கு முக்கிய காரணம் அவர் நயன்தாராவை போன்று சோலோ ஹீரோயினாக நடிக்க ஆசைப் பட்டது தான்.

தற்போது சினிமாவில் நயன்தாராவின் வளர்ச்சி அசுர வளர்ச்சி ஆக இருக்கிறது. ஆரம்பத்தில் வழக்கமான ஹீரோயின்களை போன்று நடித்து வந்த இவர் தற்போது கதையின் நாயகியாக பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்த கோலமாவு கோகிலா, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதனால் இவர் தற்போது இருக்கும் நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

இதைப் பார்த்துதான் தற்போது திரிஷா உச்சகட்ட வெறுப்பில் இருக்கிறார். திரிஷா, நயன்தாராவுக்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அப்படி இருக்கும்போது அவருக்கு பின்னால் நடிக்க வந்த நயன்தாரா இன்று புகழின் உச்சியில் இருக்கிறார் என்ற ஆதங்கம் தான் அவரின் கோபத்திற்கு காரணம்.

இதனால் அவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதை கேட்காமல் நயன்தாராவை பற்றி புலம்பி வருகிறார். நயன்தாரா நடித்து தோல்வி அடைந்த சில படங்களின் பெயர்களை கூறி அவரை எப்படி லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம் என்று கேட்டு வருகிறாராம்.

மேலும் இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு எல்லாம் அவருடைய அம்மாதான் கதை கேட்டு முடிவு செய்வார். ஆனால் இப்போது திரிஷாவே நேரடியாக கதையை கேட்க ஆரம்பித்துவிட்டார். எப்படியாவது நயன்தாராவை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கம் தான். விளைவு மோசமாக இல்லாமல் இருந்தால் சரிதான் என்று திரையுலகில் பேசி வருகின்றனர்.