செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

200 கோடி வாங்கும் பாக்ஸ் ஆபிஸ் கிங்.. விஜய்யின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Actor Vijay: விஜய் படம் வெளியாகிறது என்றாலே ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனமும் அங்கு தான் இருக்கும். அதே போல் உலக அளவில் அதற்கு வரவேற்பு கிடைக்கும்.

அதனாலேயே தற்போது அவர் பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக மிரட்டி கொண்டிருக்கிறார். அதற்கு ஏற்றார் போல் அவருடைய சம்பளமும் 200 கோடியாக இருக்கிறது.

ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இவர் வாங்கிய சம்பளம் மிக மிக குறைவு தான். அதிலும் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த வெற்றி படத்திற்காக வெறும் 500 ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

விஜய்யின் சம்பளம்

அதை அடுத்து ஹீரோவாக வேண்டும் என்ற வெறியில் தன் பயணத்தை தொடங்கிய இவருக்கு பூவே உனக்காக நல்ல அடையாளமாக அமைந்தது. பின்னர் வெற்றி தோல்வி என இரண்டையும் மாறி மாறி சந்தித்து வந்தார்.

அப்போது கில்லி தான் இவருக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த படத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் நான்கு கோடி.

அதைத்தொடர்ந்து துப்பாக்கி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு விஜய்யின் சம்பளமும் கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்து பீஸ்ட் படத்தில் 100 கோடியில் வந்து நின்றது.

மேலும் கடந்த வருடம் வெளியான லியோ 600 கோடி வரை வசூலித்த நிலையில் தற்போது விஜய்யின் சம்பளம் 200 கோடியாகும். ஆனால் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் இவர் சினிமாவை விட்டு விலகுவது திரையுலகினருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும்.

Advertisement Amazon Prime Banner

Trending News