ஹீரோவை தாண்டி ராஜ்கிரணால் வெற்றி பெற்ற 5 படங்கள்.. அய்யனார் சாமி போல் கும்பிடப்பட்ட துரை ஐயா

Rajkiran Best 5 Movies: ஒரு படத்தின் வெற்றிக்கும், வசூலுக்கும் ஹீரோ முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் ஹீரோவை தாண்டி சில கதாபாத்திரங்கள் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததுண்டு. அப்படி ராஜ்கிரணால் வெற்றி பெற்ற ஐந்து படங்கள் பற்றி இங்கு காண்போம்.

சண்டைக்கோழி: லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது சண்டைக்கோழி. இப்படத்தில் ராஜ்கிரண் துரை ஐயா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இன்னும் சொல்லப் போனால் விஷாலை தாண்டி இவர்தான் ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு இவருடைய கதாபாத்திரம் இருக்கும்.

அதற்கு ஏற்றார் போல் ராஜ்கிரணும் கலக்கல் ஆக நடித்திருப்பார். அய்யனார் சாமி போல் கும்பிடப்பட்ட அந்த கதாபாத்திரம் இப்போதும் அவருக்கு ஒரு அடையாளமாக இருக்கிறது.

நந்தா: பாலா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் சூர்யா, லைலா இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள். அதில் ராஜ்கிரண் பெரியவர் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அப்படத்தில் இவருடைய நடிப்பும் உடல் மொழியும் வேற லெவலில் இருக்கும். சிறு இடைவெளிக்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுத்த ராஜ்கிரணுக்கு இப்படம் மறக்க முடியாத ஒரு படம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

Also read: ராஜ்கிரண் காலில் விழுந்து கதறும் கார்த்தி.. சூட்டிங் ஸ்பாட்டில் வேஷ்டி பாய் செய்யும் அக்கப்போரு

பா பாண்டி: தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் கதையின் நாயகனாக இப்படத்தில் நடித்திருப்பார். சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கும் இவர் தன் காதலியை தேடி புறப்பட்டு செல்வது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கும். அதில் ராஜ்கிரண் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

மஞ்சப்பை: ராகவன் இயக்கத்தில் விமல், லட்சுமி மேனன் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. இதில் ராஜ்கிரண் விமலின் தாத்தாவாக நடித்திருப்பார். பேரனின் மீது அதிக பாசம் உள்ள இவர் வெகுளியான கிராமத்தானாக இருப்பார்.

அதனால் ஏற்படும் பிரச்சனையால் இறுதியில் மனநலம் பாதிக்கப்பட்டது போல் இவருடைய கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும். நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் விமலை தாண்டி ராஜ்கிரண் தான் அதிக ஸ்கோர் செய்திருப்பார்.

கொம்பன்: முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமிமேனன் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. இதில் ராஜ்கிரண் கார்த்தியின் மாமனாராக நடித்திருப்பார். எதார்த்தமான மனிதராக இவருடைய நடிப்பு படத்தில் சிறப்பாக அமைந்திருக்கும்.

Also read: தனுஷ் ஓவரா முட்டுக் கொடுக்கும் ஹீரோயின்.. சிவகார்த்திகேயன் கையில் இருந்து ரெக்க முளைச்சி பறந்த கிளி

அந்த வகையில் இந்த படங்கள் அனைத்திலும் ராஜ்கிரண் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார். அதனாலயே இப்படங்களின் வெற்றிக்கு இவரும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்