கொரோன மூன்றாம் அலையால் கலக்கத்தில் திரையரங்குகள்.. வருகிறது புதிய கட்டுப்பாடு

2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை நோக்கி பல திரைப்படங்கள் வெளியாக காத்துக் கொண்டிருந்தன. ஆனால் அனைத்திற்கும் பேரிடியாக வந்தது கொரோன மூன்றாம் அலை. நாளுக்கு நாள் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.

ஜனவரி 13, 14 தேதிகளில் பொங்கல் விடுமுறைக்காக பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட பல படங்கள் வெளியாவதற்கு காத்துக்கொண்டிருந்தன. வலிமை, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களை வெளியிடுவதற்காக படக்குழுவினர் தயாராகி கொண்டிருக்கும் வேளையில் பேரிடியாக வந்தது லாக் டவுன்.

கொரோன கட்டுப்பாடு விதிமுறைகள் என ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக் டவுன் அறிவித்தது தமிழ்நாடு அரசாங்கம். அதுமட்டுமின்றி உணவகங்கள், மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் புதிய விதிமுறைகளின் படி நடந்து கொள்ள வேண்டுமென அரசாங்கம் சில கட்டுப்பாடுகளையும் விதித்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக திரையரங்குகளில் 50% இருக்கைகளுடன் தான் படத்தினை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என திரையரங்குகளுக்கு கட்டுப்பாடும் விதித்தது. இப்படி திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் திரைத்துறையினர் கலக்கத்தில் இருக்கின்றனர்.

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்களுக்கு தியேட்டரில் முழு அனுமதி கொடுக்கவில்லை என்றால் போட்ட பணத்தை திருப்பி எடுக்க முடியாது. பெரும் நஷ்டம் ஏற்படும் என்று அனைத்து படக்குழுவினரும் தங்களது படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தனர்.

இப்பொழுது சிறு படங்கள் வெளியாவதிலும் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோன பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திரையரங்குகள் முழுவதுமாக மூடப்படுவதாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்