மாமியாருக்கு சரியான சவுக்கடி கொடுத்த மருமகள்.. அரண்டு போன பாக்யா

Bhakyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது யாரும் எதிர்பார்க்காத சில விருப்பங்கள் அரங்கேறி இருக்கிறது. அதாவது பாக்யாவின் மூத்த மகனான செழியன் தன் அலுவலகத்தில் வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் பழகிய நிலையில் இந்த விஷயம் பாக்யாவின் காதிற்கு சென்றது. இது குறித்து தனது மகனை பாக்யா கண்டிருந்தார்.

அதன் பிறகு இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க மாலினி நேரடியாகவே பாக்யாவின் வீட்டுக்கு வந்து ரணகளம் செய்துவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் ஜெனிக்கும் செழியன் வேறு ஒரு பெண்ணுடன் பழகுவது தெரிந்து விட்டது. அதோடு மட்டுமல்லாமல் பாக்யாவுக்கும் இந்த விஷயம் முன்பே தெரிந்த தன்னிடம் இருந்து மறைத்துள்ளதால் கோபத்தில் ஜெனி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இந்நிலையில் பாட்டி ஈஸ்வரி மற்றும் பாக்யா இருவரும் ஜெனியை சமாதானப்படுத்துவதற்காக அவரது வீட்டிற்கு செல்கிறார்கள். சாதுமிரண்டா காடு கொள்ளாது என்பது போல இதுவரை சைலன்டாக இருந்த ஜெனி இப்போது விஸ்வரூபம் எடுத்து பாக்யாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். அதாவது தன்னை மன்னித்து விடும்படி பாக்யா கேட்கிறார்.

Also Read : குணசேகரன் திட்டத்தை தவடு பொடியாக்கிய தோழர்.. இனி மருமகள்களின் ஆட்டம் ஆரம்பம்

ஆனால் கொஞ்சமும் யோசிக்காத ஜெனி, நீங்கள் என்னை எப்படி கூப்பிட வந்திருக்கிறீர்கள், இதே பிரச்சனை உங்களுக்கும் நடந்திருக்கிறது. உங்களுக்கு வந்தால் மட்டும் தான் பிரச்சனை எனக்கு அது சாதாரண விஷயமா என சரமாரியான கேள்வியால் பாக்யா தாக்கி பேசுகிறார். இதனால் பாக்யா ஒரு கணம் ஆடிப் போய்விடுகிறார்.

என்ன பிரச்சினையாக இருந்தாலும் பாக்யாவுக்கு பக்க பலமாக இருந்து வந்த ஜெனி முதல்முறையாக எதிர்த்து பேசி இருக்கிறார். ஏனென்றால் பாக்யா அந்த சமயத்தில் நடுநிலையாக இல்லாமல் தனது மகனுக்கு சாதகமாக நடந்து கொண்டதே எல்லா பிரச்சனைக்கும் காரணமாக அமைந்தது. மேலும் அடுத்ததாக பாக்கியலட்சுமி தொடரில் பூகம்பம் வெடிக்க இருக்கிறது.

செழியனின் வாழ்க்கையில் தான் புயல் காற்று வீசுகிறது என்றால், அடுத்ததாக எழில் வாழ்க்கையிலும் அதே நிலைமை தான். கணேஷிடம் ஒரு வாரம் அவகாசம் கேட்ட நிலையில் இப்போது அதற்கான கெடு முடிய உள்ளதால் கண்டிப்பாக அமிர்தாவை தேடி வந்து விடுவார். இதனால் பாக்யா இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்.

Also Read : மாமியாருக்கு ஏற்ற ஆளு இந்த சக்காளத்தி.. அப்பன் செஞ்ச பாவம், மகன்களை மீட்டெடுக்கும் பாக்கியா