Ethirneechal: குணசேகரன் மீசையில் மண் ஒட்ட செய்யப் போகும் சாருபாலா.. வாய் கிழிய ஆர்ப்பரிக்கும் அப்பத்தா

படிக்கற்களைக் எல்லாம் தடை கற்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார் குணசேகரன். வீட்டு பெண்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் குணசேகரன் இடித்து விடும்படி பேசுகிறார். அவருக்கு வலதுகரமாக கரிகாலனும் அவரது அம்மாவும் இருக்கிறார்கள். குணசேகரனின் தளபதி போல் கரிகாலன் நிற்கிறார்.

குணசேகரன் பெயரை வைத்து தான் இவர்களுக்கெல்லாம் மதிப்பு. என் பெயர் இல்லை என்றால் இவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் என்று ஆணவத்தில் ஆடுகிறார். இந்த விழாவிற்கு ஒரு பைசா கூட கலெக்சன் ஆகாது என்று உச்சகட்ட மும்மதையில் இருக்கிறார் குணசேகரன்.

வாய் கிழிய ஆர்ப்பரிக்கும் அப்பத்தா

ஒரு முறை தான் காது குத்த வேண்டும் இப்படி காசுக்காக அடிக்கடி காது குத்த கூடாது என தகாத வார்த்தைகளால் தாரா பாப்பாவை திட்டுகிறார். கரிகாலனோ, இவர்கள் எங்கே முன்னேறி விடுவார்களோ என மனதுக்குள்ளயே குமுறுகிறார். காதுகுத்து விழாவில் குணசேகரனின் மூக்கு உடையும்படி நடக்கப்போகிறது சம்பவம்.

இதுவரை வீட்டுப் பெண்கள்பத்திரிக்கை கொடுத்ததில் குணசேகரன் முன்னாள் காதலி மற்றும் தற்போது எதிரியான சாருபாலா ராஜா தம்பதியினருக்கு பத்திரிகை அழைப்பு கொடுத்த மாதிரி காட்ட வில்லை. ஆனால் அங்கே தான் ஜீவானந்தம் வைத்திருக்கிறார் ஒரு திருப்புமுனை.

காதுகுத்து, மொய் விருந்துக்கு வெளிநாட்டிலிருந்து வருகிறார் சாருபாலா, அதுமட்டுமின்றி ஜீவானந்தம் மற்றும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் அனைவரும் வந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்கிறார்கள். இதனால் அங்கே அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக பணம் பிரிகிறது. இதனை எல்லாம் எதிர்பாராத குணசேகரன் மீசையில் மண் ஒட்டுகிறது.

Next Story

- Advertisement -