கடைசியாக நேரத்தில் ஜூட் விட்ட ரன்வீர் சிங்.. ரஜினி, லோகேஷ் கூட்டணியிலிருந்து விலக காரணம் இதுதான்

Rajini: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியானது. லோகேஷ் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் ஒரு பான் இந்தியா படமாகும்.

இதற்கு முன்பு வெளியான லோகேஷின் படங்களை காட்டிலும் இதில் ஒரு தனித்துவம் இருக்கும் என அவரே தெரிவித்திருந்தார். அதனாலயே சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் இப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டை எதிர்பார்த்து வருகின்றனர்.

அதன்படி ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் இதில் நடிப்பதாக இருந்தார். லோகேஷ் சொன்ன கதை அவருக்கு ரொம்பவும் பிடித்ததால் கிட்டத்தட்ட அனைத்தும் பேசப்பட்டு உறுதியாகும் நிலையில் இருந்தது.

கூலி படத்தில் இருந்து விலகிய ரன்வீர் சிங்

ஆனால் தற்போதைய தகவலின் படி ரன்வீர் சிங் இப்படத்தில் இருந்து விலகி விட்டாராம். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று சம்பளப் பிரச்சனை மற்றொன்று லோகேஷ் கேட்ட தேதியை கொடுக்க முடியாதது.

அதனாலேயே அவர் இப்போது இதில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். ஆக மொத்தத்தில் ரன்வீர் சிங் கூலி படத்தில் இல்லை என்பது உறுதியாக தெரிய வந்துள்ளது.

ஆனால் பான் இந்தியா படத்தில் பாலிவுட் நடிகர் இல்லை என்றால் எப்படி? அதனாலேயே லோகி இப்போது அடுத்த கட்ட வேட்டையை ஆரம்பித்துள்ளார். விரைவில் முன்னணி இளம் நடிகர் இப்படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -