திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

குணசேகரன் திட்டத்தை தவடு பொடியாக்கிய தோழர்.. இனி மருமகள்களின் ஆட்டம் ஆரம்பம்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா, குணசேகரன் முகத்தில் கறியை பூசும் படி அந்த 40% சொத்தை சரியான விதத்தில் பயன்படுத்தி விட்டார். பெண்களின் முன்னேற்றத்திற்காக இயக்கத்தை ஆரம்பித்து ஜீவானந்தத்தை தலைமைப் பொறுப்பை ஏற்க வைத்திருக்கிறார்.

அத்துடன் இந்த இயக்கத்தை நிர்வாகம் பண்ணும் பொறுப்பை நான்கு மருமகளிடம் ஒப்படைத்து இருக்கிறார். இதன் மூலம் குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது. இவர்களுக்கு பக்கபலமாக இருந்து உதவப் போவது ஜீவானந்தம். மேலும் இந்த நிகழ்ச்சியில் அப்பத்தா மற்றும் ஜீவானந்தத்தின் உயிருக்கு கெடு வைத்தார் குணசேகரன்.

Also read: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 இடத்தை பிடித்த சீரியல்கள்.. சிங்கப் பெண்ணிடம் தோற்றுப் போன குணசேகரன் 

இதை மொத்தமாக சுக்கு நூறாக உடைத்து விட்டார் கௌதம். அதாவது மர்ம நபர் ஜீவானந்தத்தை குறி வைக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட கௌதம் அவரை சூட் பண்ணி விடுகிறார். இதனால் மற்ற யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. அதுவும் குணசேகரன் ஆசைப்பட்டது எதுவுமே நடக்காமல் போய்விட்டது.

இத்தனை நாட்களாக அந்த சொத்தை எப்படியாவது அபகரித்து விடலாம் என்று போராடி வந்தவர்க்கு கடைசியில் ஒன்னும் இல்லாமல் போய்விட்டது. அத்துடன் படித்த பெண்களை அடிமையாக்கி வீட்டு வேலைக்காரிகளாக நடத்தும் இவருடைய ஆணவத்திற்கும் முடிவு கட்டிவிட்டார் அப்பத்தா.

இதன் பிறகு தான் இனி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களின் ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது. இனி ஒவ்வொரு நாளும் குணசேகரன் மற்றும் கதிர் கதறி கதறி அழ போகிறார்கள். அந்த அளவிற்கு மருமகள்கள் தரமான சம்பவத்தை செய்யப் போகிறார்கள். இனி குணசேகரன் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது ஒவ்வொரு நாளும் அவமானத்தை சந்திக்கப் போகிறார்.

Also read: மாமியாருக்கு ஏற்ற ஆளு இந்த சக்காளத்தி.. அப்பன் செஞ்ச பாவம், மகன்களை மீட்டெடுக்கும் பாக்கியா

- Advertisement -spot_img

Trending News