அப்படி இப்படின்னு அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்ன நடிகர்.. அவமானம் தாங்காமல் அதிரடி முடிவெடுத்த பிரேமம் நடிகை

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மலையாள படமான பிரேமம் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. நிவின் பாலி, சாய் பல்லவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படத்திற்கு தமிழ் ரசிகர்களும் மிகுந்த ஆதரவை கொடுத்தனர்.

அதை தொடர்ந்து இந்த திரைப்படம் தெலுங்கிலும் வெளியாகி ஹிட் ஆனது. இந்த பிரேமம் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்தான் அனுபமா பரமேஸ்வரன். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தமிழில் தனுசுடன் இணைந்து கொடி திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி கொண்டு வரும் இவர் டிஜே தில்லு திரைப்படத்தில் நடித்து வந்தார்.

Also read: சிவகுமார் போல் செல்பி எடுக்க மறுத்த அனுபமா.. பதிலுக்கு ரசிகர்கள் செய்த அசத்தலான செயல்

ஏற்கனவே கடந்த பிப்ரவரியில் வெளியாகி வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. அதில் சித்து ஜோன்னலசட்டாவுக்கு ஜோடியாக நடிப்பதற்கு அனுபமா ஒப்பந்தமானார். ஹைதராபாத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அனுபமாவுக்கும் ஹீரோவுக்கும் இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்திருக்கிறது.

அதாவது அந்த ஹீரோ அனுபமாவை நடிப்பு சம்பந்தமாக கொஞ்சம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி இருக்கிறார். இது பிடிக்காத அனுபமா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த சண்டை பெரும் மோதலாக வெடித்து இருக்கிறது. இதனால் இயக்குனரும் அவர்களை சமாதானப்படுத்துவதற்கு முயற்சி செய்திருக்கிறார்.

Also read: அன்று லிப் லாக் காட்சிக்கு நோ சொன்ன அனுபமா.. இன்று பளிச்சின்னு உதடு முத்தம் கொடுக்க இதான் காரணமாம்

ஆனாலும் அவர்கள் இருவரும் கடும் கோபத்துடன் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இதனால் அதிர்ந்து போன இயக்குனர் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியாமல் பேக்கப் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு அனுபமா கோபத்தை குறைத்து விட்டு படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்த படத்திற்காக வாங்கிய முன் பணத்தை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்து இருக்கிறார்.

மேலும் இனிமேல் இந்த படத்தில் தொடர முடியாது என்றும் தெரிவித்து இருக்கிறார் தற்போது அவர் நடித்த கேரக்டரில் மடோனா செபாஸ்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஹீரோ அவமானப்படுத்தியதால் தான் அனுபமா இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று பேசப்பட்டு வருகிறது. தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மீடியாவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Also read: நைட் டிரஸ்ஸில் கும்முனு புகைப்படம் வெளியிட்ட அனுபமா.. தூக்கத்தைத் தொலைத்த இளசுகள்