வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் புது லவ் மேஜிக்.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த குஷி போஸ்டர்

சமந்தா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவதிப்பட்டு வந்தார். மேலும் மீண்டும் இவர் நடிக்க வருவது கடினம் என பலர் கூறி வந்தனர். ஆனால் அதற்கெல்லாம் சரியான முற்றுப்புள்ளி வைக்கும்படி சமந்தா அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் சகுந்தலம் படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. சரித்திர நாவலை கதையாக எடுத்துள்ள இந்த படத்தில் சமந்தா ராணி போல காட்சி அளிக்கிறார். அதற்கான புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் சமந்தா வெளியிட்டிருந்தார்.

Also Read : 10 வருஷத்துக்கு முன்னாடி தனுஷ், சமந்தா பல்லி மாதிரி தான் இருந்தாங்க.. கில்லி மாதிரி சொல்லி அடிச்ச வரலட்சுமி

இதைத்தொடர்ந்து விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக குஷி என்ற படத்தில் சமந்தா நடித்து வருகிறார். ஷீலா நிர்வாணா இயக்கும் இந்த படம் காதல் கதை அம்சத்தை கொண்டுள்ளது. இப்போது இணையத்தில் ரிலீஸ் தேதியுடன் குஷி படத்தின் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

அதாவது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் குஷி படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த போஸ்டரில் சமந்தா, விஜய் தேவர்கொண்டா கையைப் பிடித்து இருக்குபடி புது லவ் மேஜிக் போன்று காட்சியளிக்கிறது. மேலும் குஷி படம் தெலுங்கு மொழியில் உருவாகி உள்ளது.

Also Read : நயன்தாரா, சமந்தா எல்லாம் பின்ன போங்க.. சைலன்டாக வளர்ந்து வரும் சீரியல் நடிகை

தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஒரு பான் இந்திய படமாக குஷி படம் வெளியாகிறது. மேலும் மீண்டும் புது உத்வேகத்துடன் சமந்தா இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கண்டிப்பாக குஷி படம் சமந்தாவின் திரை வாழ்க்கையில் டைனிங் பாயிண்டாக அமையும்.

vijay-devarakonda-samantha-kushi

Also Read : சமந்தா, நயன்தாரா போல ஐட்டம் நடிகை என பெயர் வாங்காத மூன்றெழுத்து நடிகை .. 20 ஆண்டுகளில் ஒரு பாட்டு கூட இல்லையாம்

- Advertisement -

Trending News