ஏகே 62-வில் மகிழ் திருமேனிக்கு போட்டியாக வந்த மாஸ் இயக்குனர்.. லியோவை டார்கெட் செய்து லைக்கா போடும் திட்டம்

அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவனுக்கு பிறகு யார் இயக்குனர் என்று பிரச்சினை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதில் மகிழ் திருமேனி பெயர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இப்போது மகிழ் திருமேனிக்கு போட்டியாக ஏகே 62 படத்தில் இயக்குனர் ஒருவர் லிஸ்டில் உள்ளார்.

ஏனென்றால் வாரிசு படத்திற்குப் பிறகு விஜய் லோகேஷின் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் அடங்கிய ப்ரமோ வீடியோ நேற்று வெளியாகி சோசியல் மீடியாவை ரணகளம் செய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் லியோவை டார்கெட் செய்து லைக்கா மாஸ் இயக்குனரை களத்தில் இறக்கி விட திட்டம் போட்டுள்ளது.

Also Read: மகிழ் திருமேனி படத்தின் காப்பி தான் விக்ரம் படமா.? அட்லி போல காப்பி கதையில் சிக்கிய லோகேஷ்

ஆனால் எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. இப்போது புதிதாக வெங்கட் பிரபுவும் இதில் இணைந்துள்ளார். ஆனால் வெங்கட் பிரபுவிற்கு அஜித் இன்னும் ஓகே சொல்லவில்லை. மகிழ் திருமேனியா அல்லது வெங்கட் பிரபுவா இல்லை வேறு இயக்குனரா என்ற விடை மிக விரைவில் அறிவிக்கக்கூடும்.

மேலும் லைக்கா சுபாஷ்கரனின் மேனேஜர் வெங்கட் பிரபுவுக்கு நெருங்கிய நண்பர். அவரும் அஜித் மற்றும் சுபாஷ்காரனிடம் வெங்கட் பிரபுவை சேர்க்க சொல்லி பேசி வருகிறாராம். இதைப் போன்று அஜித்தின் பில்லா 2, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குனர் விஷ்ணுவர்தனை ஏகே 62 படத்தை இயக்குவதற்காக லைக்கா அணுகியது.

Also Read: ஓவரா ஏங்க விட்ட அஜித்துக்கு கொடுத்த பதிலடி.. வாழ்க்கை ஒரு வட்டம் என நிரூபித்த விஷ்ணுவர்தன்

ஆனால் விஷ்ணுவர்தன் ஏற்கனவே சல்மான் கான் படத்தில் கமிட்டாகி விட்டார். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஷேர்ஷா படம் ஹிந்தியில் நல்லா போனதால், விஷ்ணுவர்தனுக்கு அங்கே ஒரு மார்க்கெட் உருவாகி உள்ளது. அடுத்து பாலிவுட்டில் விஷ்ணுவர்தன் இயக்கும் சல்மான் கானின் படத்தின் படப்பிடிப்பும் வரும் ஜூன் மாதம் துவங்க உள்ளது.

ஆகையால் விஷ்ணுவர்தன் ஏகே 62 படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை. இதைத் தவிர மகிழ் திருமேனி அல்லது வெங்கட் பிரபு இருவருள் ஒருவர் தான் ஏகே 62 படத்தை இயக்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் இருவருள் யார் என்பதை கூடிய விரைவில் லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ஏகே-62 படத்தில் நான் இல்ல, உறுதி செய்த விக்னேஷ் சிவன்.. மீண்டும் இணைய வாய்ப்பிருக்கா?