சூர்யா வச்ச செக்.. தளபதியின் சினிமா கேரியரையே புரட்டி போட்ட கில்லி

Ghilli teAM
Ghilli teAM

Ghilli movie: விஜய் நடிச்ச கில்லி படத்துக்கும், நடிகர் சூர்யாவுக்கும் என்ன சம்பந்தம்னு தோணலாம். ஒரு வேலை அவருடைய காதல் மனைவி ஜோதிகா நடிச்சிருந்தா கூட இந்த செய்தியில் சூர்யா பேர் வரலாம். ஆனால் விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த கில்லி படத்தில் எதுக்கு சூர்யா பேரு அடிபடுதுன்னு நினைக்கலாம்.

20 வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆகி செம ஹிட் அடித்த கில்லி படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. கில்லி படம் ஒவ்வொரு முறையும் டிவியில் ஒளிபரப்பப்படும் போது டிஆர்பி தெறிக்க விட்டிருக்கும்.

இப்பவும் கில்லி படம் பாக்கணும்னு நினைச்சாலே அடுத்த ஒரு வாரத்தில் எப்படியும் சன் டிவில போற்றுவாங்க. அப்படி இருக்கும்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்ட தியேட்டர்கள் திருவிழா போல் மாறியதுதான் பெரிய சர்ப்ரைஸ்.

விஜய் நடித்துக் கொண்டிருக்கும் GOAT படம் ரிலீஸ் ஆன கூட இப்படி கொண்டாடுவாங்களா என்பது சந்தேகம்தான். அப்படி என்னதான்யா இருக்குது இந்த படத்துல என நினைக்கிறவங்களுக்கு பதில், அப்படி என்ன இல்லன்னு நீங்க நினைக்கிறீங்க.

மாசா ஒரு ஹீரோ, கிளாஸா ஒரு வில்லன், அட்டகாசமான ஹீரோயின், இது போதாதா ஒரு படத்தோட வெற்றிக்கு.

தில்ராஜ் ஸ்டைல்ல சொல்லனும்னா, காதலுக்கு காதலும் இருக்கு, காமெடியும் இருக்கு, ஆக்சன் சீனும் இருக்கு, சென்டிமென்ட் சீனும் இருக்கு, பக்காவா பாடல்களும் இருக்கு. இதுதான் படத்தின் பெரிய வெற்றிக்கு காரணம்.

கில்லி படம் தியேட்டரில் கொண்டாடப்படுவதை தொடர்ந்து அந்த படத்தைப் பற்றிய நிறைய தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. அப்படி நமக்கு கிடைச்ச விஷயம் தான் நடிகர் சூர்யா பற்றியது. கில்லி படத்தோட கதை முதலில் சூர்யாவுக்குப் போய் இருக்குமோ என்று தோணும், ஆனா அதுதான் இல்ல.

சூர்யா வச்ச செக்

2000 ஆண்டின் தொடக்கத்தில் வெற்றி ஜோடியாக இருந்தவர்கள் தான் விக்ரம் மற்றும் ஜோதிகா. இவர்களை வைத்துத்தான் கில்லி படத்தை எடுக்க முதலில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஒரு சில காரணங்களால், சூர்யாவுக்கு ஜோதிகா இந்த படத்தில் நடிப்பதில் விருப்பமில்லை.

அதனால் அப்போதைய தன்னுடைய காதலியை இந்த படத்தில் நடிக்க கூடாது என திட்டவட்டமாக சொல்லிவிட்டார். ஜோதிகா படத்திலிருந்து வெளியேறிய சமயத்தில் விக்ரமும் ஒரு சில காரணங்களால் படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

அதற்கு பிறகு தான் விஜய் மற்றும் திரிஷா என்னும் அட்டகாசமான ஜோடி கில்லி படத்தில் நுழைந்திருக்கிறது. ஒரு வகையில் நடிகர் விஜய்யின் சினிமா கேரியரை புரட்டிப்போட்ட கில்லி படத்தில் அவர் நடிப்பதற்கு, அவருடைய நண்பர் சூர்யாவும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

Advertisement Amazon Prime Banner