புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பைனல் வரை சென்று அசிங்கப்பட போகும் மைனா.. பல லட்சத்துடன் பணப்பெட்டியை எடுத்த அதிர்ஷ்டசாலி

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி கிட்டதட்ட 100 நாட்களை நெருங்கி உள்ளது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் மிகவும் மந்தமாகத்தான் சென்று வருகிறது. மேலும் இந்த வாரம் கடைசி வாரம் என்பதால் விஜய் டிவியில் உள்ள பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பைனல் லிஸ்ட்டாக விக்ரமன், அசீம், ஷிவின், அமுதவாணன், மைனா நந்தினி மற்றும் கதிரவன் ஆகியோர் உள்ளனர். எல்லா சீசனிலும் கடைசி வாரம் பணப்பெட்டி வைக்கப்படும். இதில் டைட்டில் வின்னர் பட்டம் தனக்கு கிடைக்காது என்று முன்கூட்டியே கணித்த சிலர் அந்த பண பெட்டியை எடுத்துச் செல்வார்கள்.

Also Read : தளபதி 67 இல் இணைந்த பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. ஒருவேளை விஜய்க்கு ரத்த சொந்தமா இருக்குமோ?

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சாதுரியமாக விளையாடி வந்த சிபி 12 லட்சத்துடன் பணப்பெட்டியை எடுத்துச் சென்றார். அதேபோல் இந்த சீசனில் யார் பணம் பெட்டியை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

போட்டியாளர்கள் பணப்பெட்டியை எடுக்கும் வரையில் அதன் மதிப்பு அதிகமாய் கொண்டே போகும். அந்த வகையில் மைனா நந்தினி தான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பணப்பெட்டியை எடுப்பார் என பெரும்பாலான ரசிகர்கள் நினைத்து வந்தனர். ஆனால் தன் மீது உள்ள நம்பிக்கையால் பணப்பெட்டியை மைனா நந்தினி தவறவிட்டுள்ளார்.

Also Read : ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த 5 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. டைட்டிலை அடிக்க போகும் அதிர்ஷ்டசாலி

எப்படியோ 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்கு பிடித்த கதிரவன் பணப்பெட்டியை எடுத்துக்கொண்ட வீட்டிலிருந்து வெளியேற உள்ளார். மேலும் கதிரவன் 3 இருந்து 5 லட்சத்திற்கும் அதிகமாக பிக் பாஸ் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துச் செல்ல உள்ளார் என கூறப்படுகிறது. கண்டிப்பாக கதிரவனுக்கு டைட்டில் பட்டம் கிடைக்காது என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆகையால் கிடைத்த வரை லாபம் என்று இதுவரை சிறப்பாக விளையாண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் எக்கச்சக்க பணத்தை சம்பாதித்துள்ளார் கதிரவன். இதை அறிந்த ரசிகர்கள் மைனா நந்தினி பைனல் வரை சென்று அசிங்கப்பட போகிறார் என கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Also Read : 97 நாட்களில் ஏடிகே வாங்கிய சம்பளம்.. வாரி வழங்கிய பிக் பாஸ்

- Advertisement -

Trending News