நாடு முழுக்க அவ்வளவு எதிர்ப்பு.. பாக்ஸ் ஆபிஸை மிரட்டிவிட்ட ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் முதல் நாள் வசூல்

நாடு முழுவதும் ஏகப்பட்ட எதிர்ப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கும் மத்தியில் நேற்று ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் விபரம் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் கேரளாவில் சேர்ந்த 32,000 பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு பின் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைத்ததாக சித்தரித்து படத்தை எடுத்துள்ளனர்.

Also Read: அமீர் பட தயாரிப்பாளர் விட்ட ஒரு கோடி சவால்.. உண்மை சம்பவத்தால் இந்தியாவில் படம் வெளியிட எதிர்ப்பு

இதனால் இந்த படத்திற்கு சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிகிறது. மேலும் அந்த படத்தில் பெண்கள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு பயங்கரவாத பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகளும் தனிப்பட்ட நபர்களும் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு தொடர்ந்தனர்.

ஒரு வழியாக படத்தை ரிலீஸ் செய்த படக்குழு முதல் நாளில் மட்டும் 8 கோடி வசூலை வாரி குவித்திருக்கிறது. இந்த வசூல் படத்திற்கு நல்ல ஓபனிங் தான். அதுமட்டுமல்ல ஹாலிவுட் திரைப்படமான ‘கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி 3’ படத்தின் வசூலை மிஞ்சியது ‘தி கேரளா ஸ்டோரி’.

Also Read: ஒரு தடவை உண்மைக்காக நின்னு பாரு உன் லைஃபே மாறும்.. வெங்கட் பிரபுவின் கஸ்டடி ஆட்டம் ஆரம்பம்

ஹிந்தி இயக்குனர் சுதிப்தோ சென்னின் இயக்கத்தில் பாலிவுட்டில் தயாரான படமான ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பாலனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியதால், இந்த படத்திற்கு தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இருப்பினும் பல எதிர்ப்புகளின் மத்தியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் முதல் நாளிலேயே இந்திய அளவில் 8 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸை மிரட்டி உள்ளது. இன்னும் அடுத்தடுத்த நாட்களில் இதன் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: 50 வருடங்களாக ஆட்டி படைத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலையா.. கமல், அஜித்தை வளர்த்துவிட்டும் பிரயோஜனம் இல்ல

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்