பாலுமகேந்திராவையே வாயடைக்க செய்த இயக்குனர்.. செய்யாத ஒன்றுக்கு பழி ஏற்காத பாலா

இலங்கையை சேர்ந்த இயக்குனரான பாலு மகேந்திரா தமிழ் சினிமாவின் இயற்றிய படங்கள் ஏராளம். இவரின் படங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது முள்ளும் மலரும், சதி லீலாவதி, நீங்கள் கேட்டவை, வண்ண வண்ண பூக்கள்.

அந்த அளவிற்கு இவரின் படங்கள் கருத்துள்ளதாக அமைந்திருக்கும். மேலும் இவரின் படங்கள் பல விருதுகளை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடம் அசோஷியேட் ஆக பணிபுரிந்தவர் தான் இயக்குனர் பாலா.

Also Read: பாலா சொன்ன கதை.. செமையா இருக்குனு சொல்லிட்டு அஜித் இயக்குனருக்கு வாய்ப்பளித்த சூர்யா

மேலும் 1992ல் வெளிவந்த வண்ண வண்ண பூக்கள் என்ற படத்தை இயற்றியவர் பாலு மகேந்திரா. இப்படத்தில் பிரசாந்த்,மௌனிகா, வினோதினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்கள். இப்படம் பாலாவிற்கு முதல் படமாக அமைந்தது.

அதிலும் இப்படத்தில் உள்ள அனைத்து வேலைகளையும் பாலா ஒருவரே பார்த்தார் என்பது இவரின் நேர்த்தியை வெளிப்படுத்துகிறது. மேலும் இப்படத்திற்கு சிறப்பு கூட்டும் வகையில் இளம் நெஞ்சே வா என்ற பாடலில் இடையே மரவட்டை பூச்சி வரும் காட்சியை வைப்பதாக இருந்தார் பாலு மகேந்திரா.

Also Read: இயக்குனர் பாலாவால் நொந்து போன அருண் விஜய்.. படாதபாடு பட்டு வரும் பரிதாபம்

ஆனால் எடிட்டிங் முடிந்தபின் அக்காட்சி இடம் பெறாமல் இருந்தது அவருக்கு வருத்தத்தை அளித்தது. இதைத்தொடர்ந்து இக்காட்சிகளை யார் நீக்கியது என்று கேட்க பட குழுவினர் பாலா சொல்லி தான் நீக்கினோம் என்று கூறினார்கள். அதன்பின் பாலாவை கூப்பிட்டு திட்டி இருக்கிறார் பாலு மகேந்திரா.

அதற்கு நான் நீக்கவில்லை நீங்கள் சொல்வதெல்லாம் எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை ஆகையால் இனி நான் உங்களிடம் வேலை செய்ய மாட்டேன் என்று கூறியிருக்கிறார் பாலா. மேலும் படம் முழுவதும் இறங்கி வேலை பார்த்ததற்கு கிடைத்த வெகுமதி இதுதானா என்று வேதனை பட்டார்.

Also Read: ஒரு நேர சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருந்த பாலா.. சம்பளத்தை அப்படியே கொடுத்து தூக்கி விட்ட நடிகர்

இருப்பினும் பாலு மகேந்திராவை பார்த்து பயந்தவர்கள் அதிகம். அதனால் அவரை எதிர்த்து யாரும் பேச மாட்டார்கள். அவ்வாறு இருப்பின் தன் எதார்த்தமான கருத்தை முன் வைத்திருக்கிறார் பாலா. மேலும் செய்யாத ஒன்றுக்கு பழி ஏற்க விரும்பாத இவர் தன் துணிச்சலான பேச்சால் பாலுமகேந்திராவை வாயடைக்க செய்தார்.

- Advertisement -spot_img

Trending News