விடாப்பிடியாக வெறுத்து ஒதுக்கும் அஜித்.. நீண்ட வருடமாக காத்திருக்கும் பிரபல இயக்குனர்

அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் எப்போதுமே அஜித் ஒரு இயக்குனருடன் கைகோர்த்தால் தொடர்ந்து அதே இயக்குனருடன் தான் பணியாற்றி வருவார். கடைசியாக அவர் நடித்த படங்களின் வரிசையை பார்த்தால் அனைவருக்கும் தெரியும்.

அதாவது வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் கூட்டணி போட்ட அஜித் 4 படங்களில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து போனிகபூர், வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்கள் வெளியானது.

Also Read :அஜித் மேல் கடுப்பில் இருக்கும் எச் வினோத்.. அடுத்தடுத்து வரும் பிரச்சனை

இப்போது மூன்றாவது முறையாக ஏகே61 படம் உருவாகி வருகிறது.இந்நிலையில் சில வருடங்களாக அஜித்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விஷ்ணுவர்தன் ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளார். அஜித்துக்கு பில்லா, ஆரம்பம் போன்ற ஹிட் படங்களை விஷ்ணுவர்தன் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் விஷ்ணுவர்தனின் கதையை கேட்ட அஜித் கண்டிப்பாக படம் பண்ணலாம் என கூறிவிட்டு தற்போது வரை வாய்ப்பு கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறாராம். ஆனால் சமீப காலமாக அஜித்தின் படம் பெரிய அளவில் போகவில்லை.

Also Read :போனி கபூருக்கு ஏற்பட்ட அவமானம்.. தாங்க முடியாமல் பைக்கில் சென்ற அஜித்

கடைசியாக வெளியான வலிமை படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. அதுமட்டுமின்றி தற்போது உருவாகிவரும் ஏகே 61 படத்திலும் பல மாற்றங்களை அஜித் கூறி வருகிறாராம். இதனால் தற்போது அஜித் வான்டட் ஆக விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

விஷ்ணுவர்தனின் கேங்ஸ்டர் கதையில் மீண்டும் அஜித் நடிக்க உள்ளதால் அவரது ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனென்றால் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்று பில்லா. அஜித்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற படம் பில்லா என்றால் அது மிகையாகாது. அது போன்ற மீண்டும் ஒரு படத்திற்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Also Read :ஏகே63-க்கு வெயிட்டான இயக்குனரை லாக் செய்த அஜித்.. விக்னேஷ் சிவனுக்கு அடுத்து இவர்தான்