ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மருமகள்களின் ஆட்டம் ஆரம்பம்.. குணசேகரனுக்கு எதிராக வீசும் வலை

எதிர்நீச்சல் சீரியலின் மிகப்பெரிய சிறப்பு ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்காத விதமாக கதையை விறுவிறுப்பாக கொண்டு போவது தான். அந்த வகையில் இப்பொழுது வந்த ப்ரோமோ எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வகையில் அமைந்திருக்கிறது. அதாவது எல்லாத்தையும் ஆட்டிப்படைக்கும் விதமாக குணசேகரன் கேரக்டர் அமைந்திருக்கும்.

அடுத்ததாக அந்த வீட்டில் இவருக்கு அல்லகையாக அடிக்கடி குரலை உயர்த்தி பேசும் கதிர். இவர்களின் கொட்டத்தை எப்பொழுது அந்த வீட்டின் மருமகள்கள் அடக்குவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஜனனி வந்ததும் குணசேகரின் ஆட்டம் கொஞ்சம் அடங்கியிருந்தது என்றே சொல்லலாம். பின்பு பொண்டாட்டியை விட்டுக் கொடுக்காமல் நல்ல கணவராக சக்தி மாறியது பார்க்க நன்றாக இருந்தது.

Also read: குணசேகரனை நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட நந்தினி.. பதிலடி கொடுத்த ஜனனி

அந்த வகையில் ஜனனியை, கதிர் நக்கலாக பேசியதை பார்த்து சக்தி என் பொண்டாட்டியை பற்றி பேசுறதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று நாக்க புடுங்குற மாதிரி கேள்வியே கேட்டதும் வாடா சக்தி இதுதான் உன் கிட்ட இருந்து நாங்க எதிர்பார்க்கிறோம் என்று சொன்ன மாதிரியே இருந்துச்சு. பொண்டாட்டியை மதிப்பவனே உண்மையான ஆண்மகன் என்று நிரூபித்து விட்டார்.

ஆனால் இதையெல்லாம் பார்த்து பொறுக்க முடியாத குணசேகரன், என்னப்பா சக்தி பொண்டாட்டி கிட்ட இருந்து நிறைய விஷயம் கத்துக்கிட்ட போல என்று குத்தலாக பேசுகிறார். இவர் இப்படி பேசுனது கூட ஆச்சரியமா இல்ல ஆனா நந்தினி வந்து பேசினா பாருங்க எதிர்பார்க்கவே இல்லை. பொண்டாட்டியை எவனாவது தப்பா பேசினா இப்படித்தான் கோபப்படனும் அவன்தான் உண்மையான புருஷன் என்று சொன்னதை கேட்டதும் கதிர் குரலை எப்போதும் போல் உயர்த்தினார்.

Also read: சுடிதாரில் கெத்து காட்டும் பாக்யா, ஷாக் ஆன கோபி.. அடுத்த டாஸ்க்கை இறக்கும் ராதிகா

அப்பொழுது ரேணுகா நிறுத்துப்பா எரிச்சலா இருக்கு நீ பேசுறத பார்த்தா என்று அவர் சொல்லும் விதத்தை பார்த்தால் நம்ம ரேணுகாவா இது அப்படிங்குற மாதிரி இருந்துச்சு. உடனே குணசேகரன் யாரை குத்தி காட்டுற என்று கேட்க அதற்கு எல்லாரும் ஒரு ரியாக்ஷன் கொடுத்தாங்க பாரு அது எப்படி இருந்துச்சுன்னா நாங்க எல்லாம் ஒன்னு சேர்ந்துட்டோம் உனக்கு இனிமேல் இருக்குது பாரு அப்படிங்கிற மாதிரி இருந்துச்சு.

அத்துடன் ரேணுகா மற்றும் நந்தினி இவர்களின் காம்போவை பார்க்கும் பொழுது குணசேகரனுக்கு எல்லா விதத்திலும் ஆப்பு ரெடியாக இருக்கிறது என்று நன்றாக தெரிகிறது. அடுத்ததாக இதையெல்லாம் பார்த்த அப்பத்தா இதை தான் நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன். இனிமேல் நீங்க எல்லாரும் சுயமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் அப்படி சொல்ற மாதிரி அவர் கண் பார்வை மற்றும் அவருடைய சிரிப்புக்கு அர்த்தமாக இருந்தது. இப்படி அந்த வீட்டில் மருமகள்கள் தொடர்ந்து குணசேகரனுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அத்துடன் பெரிய தரமான சம்பவமும் காத்துக் கொண்டிருக்கிறது.

Also read: வாலை சுருட்டி கிட்டு அடங்கி போகும் குணசேகரன்.. எல்லா விதத்திலும் பால் போட நினைக்கும் அப்பத்தா

- Advertisement -

Trending News