ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

கதிரை அடித்து விட்டு கமுக்கமாக இருக்கும் கருப்பு ஆடு.. குணசேகரனை மிஞ்சும் அளவிற்கு ஜனனியின் உறவு

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனின் ஆணாதிக்கத்தை ஒழித்துக் கட்ட போராடி வருகிறார்கள் நான்கு மருமகள்கள். அந்த வகையில் அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் குறுக்கே புகுந்து அதை கெடுத்து விடுவதை வேலையாக வைத்திருக்கிறார் குணசேகரன். ஆனாலும் தனக்கு வரும் தடை கற்கள் அனைத்தையும் படிக்கற்களாக மாற்றி சொந்த காலில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அதில் ஒரு விஷயமாகத்தான் புருஷனை எதிர்த்து ஈஸ்வரி தற்போது எலெக்ஷனில் நிற்கிறார். அடுத்ததாக கதிரும் தற்போது கைகாலில் அடிபட்டு எழுந்திருக்கவே முடியாத மாதிரி நந்தினியின் தயவு இல்லாமல் வாழ முடியாத அளவிற்கு இருக்கிறார். ஆனால் இதையே தான் உருட்டிக் கொண்டு வருகிறார்களே தவிர அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு போகாமல் இருப்பது கொஞ்சம் சொதப்பலாக இருக்கிறது.

அந்த வகையில் குணசேகரன் மொத்தமாக தோற்றுப் போய் பெண்களின் கை ஓங்கி நிற்கும்படி இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும். ஆனால் எலக்சன் என்னாச்சு என்றே தெரியாமல் அப்படியே இருக்கிறது. அடுத்து ஜனனியின் பிசினஸ் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதே மாதிரி நந்தினி, ரேணுகாவும் முயற்சி எடுத்த விஷயங்களில் தோற்றுப் போய் மறுபடியும் அடுப்பாங்கறையில் இருக்கும் படி தான் இருக்கிறது.

Also read: நாளா பக்கமும் அடிவாங்கும் குணசேகரன்.. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற முறையில் கூட்டு சேர்ந்த வில்லன்

இதுல கதிரை இப்படி அடித்து நொறுக்கியது யார் என்று தெரியாத அளவிற்கு கமுக்கமாக இருக்கிறது. அந்த வகையில் எஸ்கேஆர் தம்பி அரசுவும் இல்லை, குணசேகரனும் இருக்க வாய்ப்பு இல்லை மற்றும் ஜீவானந்தமும் இந்த மாதிரி ஒரு மட்டமான விஷயத்தை பண்ண மாட்டார். அப்படி இருக்கும் பொழுது கதிரின் நிலைமைக்கு யார் காரணமாக இருப்பார்கள்.

அந்த வகையில் தற்போது ஒரு கருப்பு ஆடு வேற புதுசாக உள்ளே நுழைந்து இருக்கிறது. அதாவது ஜனனியின் விட்டுப் போன உறவு முறையை புதுசாக காட்டி வருகிறார்கள். கிருஷ்ணன் மெய்யப்பனின் அண்ணன் குணசேகரன் வீட்டிற்கு வந்து ஜனனி எதிரி என்கிற மாதிரி பேசுகிறார். அத்துடன் இவர் ஏற்கனவே ஜனனி குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் ஒன்றும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

அதனால் கதிரின் இந்த நிலைமைக்கு அவர் கூட ஒரு காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இவருடைய பேச்சும் நடவடிக்கையும் பார்ப்பதற்கு அப்படியே குணசேகரனை உரித்து வைத்தது போல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இவரை விட பல மடங்கு ஆணாதிக்கம் பிடித்த அரக்கனாக இருக்கிறார். அந்த வகையில் புதுப்புது வில்லன்கள் தான் வருகிறார்கள் தவிர அந்த வீட்டு உள்ள மருமகளுக்கு விடிவுகாலம் பிறந்ததாக தெரியவில்லை.

Also read: அராஜகத்துக்கு மேல் அட்டூழியம் பண்ணும் குணசேகரன்.. அப்பாவாக அடைக்கலம் கொடுக்கும் ஜீவானந்தம்

- Advertisement -spot_img

Trending News