ரெட் ஜெயிண்ட் இடம் தஞ்சமடைந்த தொகுப்பாளர்.. ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு

Red Giant Solve the Problems: தற்போது வெளிவரும் பெரிய பெரிய படங்கள் அனைத்தையும் தன் வசம் வைத்துக்கொண்டு அதிக அளவில் லாபத்தை சம்பாதித்து வருவது ரெட் ஜெயிண்ட் நிறுவனம். படம் ரிலீஸ் ஆவதில் எவ்வளவோ பிரச்சனைகள் வந்தாலும் அதை ஈசியாக சரி செய்து வெளியிட்டு விடும் என்ற நம்பிக்கையில் அனைவரும் ரெட் ஜெயிண்ட் மூலம் போக ஆரம்பித்து விட்டார்கள்.

அப்படித்தான் தற்போது தொகுப்பாளராக இருந்து காமெடி டிராக்கில் நடித்து ஹீரோவாக வரும் நடிகரின் படத்தையும் ரெட் ஜெயிண்ட் வெளியிடப் போகிறது. அதாவது எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக வருபவர் ஆர்ஜே பாலாஜி. இப்போது இவர் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு போது ஆர்ஜே பாலாஜிக்கும் இயக்குனருக்கும் பல மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும் ஒரு வழியாக படப்பிடிப்பை முடித்த நிலையில் ரிலீஸ் ஆகாமல் இழுத்தடித்தது. அதற்கு காரணம் இப்படத்தை தயாரித்த ஐசரி கணேசனுடன் ஏற்பட்ட பிரச்சினை தான். இதனாலேயே ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாமல் தத்தளித்து வந்தார்கள்.

Also read: ரஜினி படத்தை தள்ளி வைத்த ரெட் ஜெயிண்ட்.. கமுக்கமாக காய் நகர்த்திய சுந்தர் சி

தற்போது இதற்கு ஒரு தீர்வு காணும் விதமாக ரெட் ஜெயிண்ட் இடம் தஞ்சம் அடைந்து விட்டார்கள். அதன்பின் இவர்கள் கிட்ட ஒரு பஞ்சாயத்து வந்துவிட்டால் அதை சரி செய்து ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடுவார்கள். அப்படித்தான் ஆர்.ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தின் ரிலீஸ் தேதிக்கும் விடிவு காலம் பிறந்து விட்டது.

அந்த வகையில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள சிங்கப்பூர் சலூன் படத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும் வருகிற ஜனவரி 25ஆம் நாள் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அத்துடன் இப்படத்தில் சத்யராஜ் மற்றும் லால் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அத்துடன் வீட்ல விசேஷம் படத்தில் ஆர்ஜே பாலாஜி மற்றும் சத்யராஜின் காம்போ ரசிக்கும்படியாக இருக்கும்.

அந்த வகையில் சிங்கப்பூர் சலூன் படத்தில் இவர்களுடைய காமெடியும் நடிப்பும் ரொம்பவே தூக்கலாக இருந்து படத்தை பார்ப்பவர்களின் மனதை குளிர வைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அத்துடன் விடுமுறை தினத்தை முன்னிட்டு படத்தை ரிலீஸ் பண்ணினால் கண்டிப்பாக லாபத்துக்கு எந்தவித குறைச்சலும் வராது என்பதற்காக குடியரசு தினத்தை முன்னிட்டு ரிலீஸ் பண்ணி லாபத்தை குவிக்கப் போகிறார்கள்.

Also read: ஓவர் தலைகனத்துடன் சுற்றி வந்த ஆர்ஜே பாலாஜி.. குப்பை கதையால் தயாரிப்பாளரிடம் காலில் விழுந்த பரிதாபம்

- Advertisement -spot_img

Trending News