புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

லியோ பட நடிகைக்கு குவியும் வாய்ப்பு.. முதல் ஆளாக துண்டு போட்ட அருள்நிதி

Actor Arulnithi: அருள்நிதி இப்போது முழு வீச்சில் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களில் மட்டுமே இவர் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதில் சமீபத்தில் வெளிவந்த கழுவேத்தி மூர்க்கன் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

அதைத்தொடர்ந்து தற்போது அவர் டிமாண்டி காலனி 2 ல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். திரில்லர் பாணியில் வெளிவந்த இதன் முதல் பாகம் ரசிகர்களை மிரட்டியதை அடுத்து இரண்டாம் பாகத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதை அடுத்து அருள்நிதி பிரம்மாண்ட படத்தில் இணைந்துள்ளார்.

Also read: எம்ஜிஆர் யுக்தியை பாலோ பண்ண நினைக்கும் அஜித்.. விஜய்யுடன் போட்டி போட விரும்பாத ஏகே

ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தை பூமி, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களை இயக்கிய லட்சுமணனின் உதவியாளர் இயக்க இருக்கிறார். இதில் என்ன சிறப்பம்சம் என்றால் இதுவரை அருள்நிதி படத்தில் இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட இருக்கிறதாம்.

இப்படத்தில் தான் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை மடோனா செபாஸ்டின் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். தமிழில் கவண் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர் கடந்த சில வருடங்களாகவே மலையாள படத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார். அப்படிப்பட்டவரை லோகேஷ் கனகராஜ் லியோ மூலம் மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார்.

Also read: இழுபறியில் இருக்கும் லியோ பிசினஸ்.. ரெட் ஜெயண்டை ஓரம் கட்டியதால் சூட்சமம் செய்யும் டாப் நிறுவனம்

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் மடோனாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். அதன் பிறகு தான் மறந்து போயிருந்த தமிழ் இயக்குனர்களுக்கு இவருடைய ஞாபகம் வந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து இப்போது தமிழில் இவருக்கான வாய்ப்புகள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்கிறது.

அதில் முதல் ஆளாக அருள்நிதி துண்டை போட்டு இடம் பிடித்திருக்கிறார். அந்த வகையில் அவருடைய படத்தில் நடிக்க சம்மதித்திற்கும் மடோனா இன்னும் சிலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். விரைவில் இவர் கமிட்டான படங்களின் அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு லியோ படத்தால் இவர் மீண்டும் பிஸியாக மாறி இருக்கிறார்.

Also read: விஜய்யை சந்திக்க கேரவனுக்கு வெளியில் காத்திருந்த அஜித்.. பதட்டத்தில் தளபதி என்ன சொன்னார் தெரியுமா.?

- Advertisement -spot_img

Trending News