சூப்பர் ஸ்டார் பட்டம் உருவாக காரணமாக இருந்த ஜாம்பவான்.. ரஜினிக்கு உடும்பு போல் ஒட்டிக்கொண்ட டைட்டில்

The actor who made Rajinikanth a superstar title: “என் வழி தனி வழி” என்று தமிழ் சினிமாவில் தடம் பதித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளம்  தலைமுறையினருக்கு டஃப் கொடுக்கும் வகையில் துடிப்புடன் நடித்து வருகிறார்.

தமிழக மக்களால் தலைவா என்று அன்புடன் அழைக்கப்படும் ரஜினியின் பூர்வீகம் கர்நாடகா என்றாலும், என்னை வாழ வைத்த தமிழ்நாடு என்று தமிழ் மண்ணோடு ஒட்டி உறவாடி வருகிறார்.

ரஜினியின் நடிப்பில் தர்பார் மற்றும் அண்ணாத்த போன்ற படங்கள் எதிர்பாராத வெற்றியைப் பெற முடியாமல் போனதால் பல எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆளானார்.

கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர், அவர் மீதான எதிர்மறையான விமர்சனங்களை தூள் தூளாக்கி “என்றும் தமிழ் சினிமாவின் வசூல் மன்னன்” என்பதை நிரூபித்து போனது.

ஜெயிலர் இசை வெளியீட்டும்போது எழுந்த சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றிய சர்ச்சை

சமீப காலமாக சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றிய கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக பரவி வந்த நிலையில், ஜெயிலர் இசைவெளியீட்டின் போது சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் கருத்து ஒன்றை பதிவு செய்தார்.

தமிழ்நாட்டின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே என்று ஆணித்தரமாக கூறினார் மாறன்.

சரி இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிகாந்த் இருக்கு யார் முதலில் கொடுத்தது? அவரை யார் சூப்பர் ஸ்டார் என்று முதலில் அழைத்தது என்று பார்க்கலாம்.

தெலுங்கின் பழம்பெரும் நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவ் தான் அந்த பட்டத்தை ரஜினிகாந்திற்கு கொடுத்தது.

தமிழ் சினிமாவில் சிவாஜியை போல், ஆந்திராவில் கோலோச்சி இருந்த நாகேஸ்வரராவ், இந்தியாவின் பல திரை விருதுகளை தனதாக்கிக் கொண்ட பெருமைக்கு சொந்தக்காரர்.

Nagarjuna and his father Nageswara rao

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் தந்தையான இவர்தான், ரஜினியின் ஸ்டைலையும், அவரது நடிப்பு திறமையும் கண்டு சூப்பர் ஸ்டார் என்று முதலில் அழைத்தாராம்.

அவர் அழைத்த வாய் முகூர்த்தம் உண்மையிலேயே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக பல வெற்றி படங்களை கொடுத்து, திரை வாழ்வில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் கடந்தும், இன்றுவரை அசைக்க முடியாத தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக நிலைத்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்