மறைமுகமாக நண்பர் அஜித்திடம் பிரச்சாரம் பண்ணிய தளபதி.. கோட் பாடலில் பல சூட்சமங்களை வச்சு பாடிய விஜய்

Vijay In Goat Song: தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கட்சியில் நிற்பவர்கள் ஓட்டு கேட்டு மக்களிடம் அடிபணிந்து கேட்பார்கள். அதேபோல தான் விஜய்யும் அரசியலில் நுழைந்ததும் வெற்றிக்காக என்ன பண்ணனுமோ அதை எல்லாம் குறி வைத்து தாக்குகிறார்.

அதாவது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிற்பதற்கான அனைத்து வேலைகளும் ஒரு பக்கம் பார்த்து வருகிறார். இன்னொரு பக்கம் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படமும், கடைசியாக தளபதி 69 படத்தில் நடிப்பதற்கான வேலைகளும் பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு முன்னிட்டு கோட் படத்தில் உள்ள பஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது. இந்த பாடலைக் கேட்ட ரசிகர்கள் ஒவ்வொருவரும் குஷியாகி வருகிறார்கள். இன்னொரு பக்கம் இந்த பாடல் முழுக்க முழுக்க அரசியலில் ஜெயிப்பதற்காக பிரச்சாரம் பண்ணும் விதமாகத்தான் வரிகள் இருக்கிறது என்று உண்மையை போட்டு உடைத்து விடுகிறார்கள்.

அந்த வகையில் விசில் போடு என்று சொல்வதற்கான அர்த்தம், ஒருவேளை சட்டமன்றத் தேர்தலில் நிற்கும் பொழுது இவருடைய சின்னம் விசில் ஆக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் விசிலுக்கு ஓட்டு போடு என்பதை சிம்பாலிக்காக சொல்கிறார்.

அஜித்திடம் ஆதரவு கேட்ட தளபதி

அதே மாதிரி இந்த பாடலில் நுணுக்கமாக பார்க்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. அதாவது வெங்கட் பிரபு இதுவரை தமிழில் இயக்கிய படங்கள் அனைத்தும் பிரதிபலிக்கிறது.

அதாவது சென்னை 28 படத்தை சொல்லும் வகையில் பேட், கோவா படத்தில் அந்த கார் ட்ரிப், பிரியாணி படத்தில் சாப்பாடு பிரியாணி காட்டுவது, மாநாடு படத்தில் டிராவல் டைம் காட்டுவது போன்ற விஷயங்கள் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள்.

அதே மாதிரி அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா படத்தில் வந்த செஸ் போடும் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த சீன் வரும்போது மட்டும் விஜய் அவருடைய வாய்ஸ் மூலம் நண்பா விசில் போடு என்று சொல்வது போல் இணைக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது நண்பர் அஜித்திடம் இப்பொழுதே பிரச்சாரம் பண்ணி விசில் போட மறந்துடாதீர்கள். அத்துடன் எனக்கு உங்களுடைய ஆதரவு வேண்டுமென்று கேட்டிருப்பது போல் தெரிகிறது. இப்படி கோட் பாடலில் பல சூட்சமங்களை வச்சு அனைவரிடமும் ஒரு பிரச்சாரத்தை பண்ணிவிட்டார். வெளிவந்த ஒரு பாடலிலே இப்படின்னா இன்னும் படத்திலே என்னென்னலாம் தளபதி செய்து வைத்திருக்கிறாரோ என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்