ரசிகர்களை ஓட்டு போட வேண்டாம் என்று சொல்லும் விஜய்..  இப்படி ஒரு அரசியல் தலைவரா.!

Thalapathy Vijay’s order to the volunteers in the election: தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் எப்படி உச்சத்தில் இருக்கும்போதே அரசியலில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தினாரோ அதே பாணியில் தளபதி விஜய்யும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும்போதே அரசியலில் கால் பதித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியின் அறிவிப்பை தொடர்ந்து, ஒப்பந்தம் ஆகியுள்ள ஒரு சில படங்களில் நடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக ஈடுபட போகிறார்.

தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தின் கோட் திரைப்படத்தில் நடித்து வரும் தளபதி படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்ல உள்ளார். அதே சமயம் விஜய் 69 படத்திற்கான கதை விவாதமும், இயக்குனர் தேடலும் பகுதிவாரியாக நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகரான விஜய் சினிமாவை விட்டு விலகுவது ஆச்சரியத்தை கிளப்பி இருந்தாலும்  அரசியல் வரவு என்பது உறுதியானது.  

தமிழக வெற்றி கழகம் என தனது கட்சியை அறிவித்து, பல அதிரடியான கட்டளைகளை பிறப்பித்து வருகிறார். 

தனது கட்சிக்கான செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தி தொண்டர்களுக்கு 2 கோடி கட்சி உறுப்பினர்களை சேர்ப்பது என்ற இலக்கையும் செட் செய்து வைத்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தில் இதுவரை கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக தகவல்.

அனுபவ அரசியல் கட்சி போல் பல அணிகளை உருவாக்கி 2026 இல் முதல்வர் ஆகிய திருவேன் என பல அண்டர்கிரவுண்ட் வேலைகளை செய்து வருகிறார் தளபதி. 

தேர்தலில் தொண்டர்களுக்கு தளபதி விஜய் போட்ட கட்டளை

2026 இல் சட்டசபையைத் தேர்தலை எதிர்நோக்க உள்ள தளபதி தற்போது வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த ஒரு ஈடுபாடும் காட்டப் போவது இல்லை.

அது மட்டும் இன்றி தன் கட்சி தொண்டர்களுக்கும் அன்பு கட்டளையாக எந்த கட்சிக்கும் சப்போர்ட் பண்ண கூடாது எனவும், சைலன்ட்டா இருங்க எந்த கட்சி பற்றி பேசவும் வேண்டாம் என பல கட்டளைகளை புஸ்ஸி ஆனந்த் மூலம் பிறப்பித்து உள்ளார் விஜய்.

விட்டா ஓட்டு போட கூடாதுன்னு சொல்வார் போல.  ஓட்டு போடுவது கட்சிக்கு சப்போர்ட் செய்வது என்பது தனிமனித உரிமை,

தேர்தலில் எந்த கட்சி ஜெயிக்கணும், யார் வரக்கூடாது என்பது போன்ற வியூகங்களை வகுக்க முடியாமல் சும்மா வேடிக்கை பார்ப்பது தலைவனுக்கு அழகல்ல, தலைவனுக்கும் அவரது தொண்டர்களுக்கும் அழகல்ல.

2026 தேர்தலை பயன்படுத்தி காய்களை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விஜய், சில தவறான முடிவுகளால் அரசியலுக்கு அவர் சரிபட மாட்டார் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறார்.

அதுமட்டுமின்றி  கோட் பட சூட்டிங் ரஷ்யாவில் நடக்க இருப்பதால் தேர்தலில் வாக்களிக்க வருவாரா? மாட்டாரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது 

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்