தல 61 படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா.? தெறி மாஸான அப்டேட்.!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத, மாஸ் நடிகர்களில் தல அஜித்தும் முக்கியமானவர். சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தன் சொந்த முயற்சியில் இந்த ஸ்டார் அந்தஸ்தை அடைந்துள்ளார். பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவர் அமராவதி படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானார்.

சினிமா தண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல திறமைகளை தனக்குள் கொண்டுள்ளார் தல. இவரது 50 வது படமான மங்காத்தா வந்த சமயம் ரசிகர்களை தனது சுய லாபத்திற்கு பயன்படுத்தமாட்டேன் என தனது ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் கலைத்தார். அதன்பின்னரும் மங்காத்தா 100 கோடிக்கு மேல் வசூலித்ததெல்லாம் வேற லெவல்.

தற்போது அஜித் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் “வலிமை” படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாங்க வேற மாதிரி’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்திற்கு பின் அஜித் யார் படத்தில் நடிப்பார் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

vinoth-ajith-cinemapettai
vinoth-ajith-cinemapettai

இந்தப்படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்க உள்ளாராம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அஜித், வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்