கலைஞர்-100 விழாவிற்கு அஜித், விஜய் வரலைன்னு புலம்புறீங்க..சொந்தத்தையே தட்டி கழித்த உதயநிதி

Tamil celebrities some members avoid Kalainar-100 function: தமிழ்நாட்டின் 12 திரைப்பட அமைப்புகள் இணைந்து தயாரிப்பாளர் சங்கம் தலைமையில் கலைஞரின் நூற்றாண்டு சாதனைகளை விவரிக்கும் வண்ணம் கலைஞர் 100 என்கிற விழாவை பொறுப்பெடுத்து நடத்தியது. கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டிற்கு கலைஞரின் குடும்பமே வந்து மேடையை நிரப்பினர் ஆனால் இன்றோ இந்த விழாவிற்கு சொந்தங்கள் கூட வராதது பேரிழப்பு.

திரை உலக நட்சத்திரங்கள், அமைச்சர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை நிறைவுடன் செய்து முடித்தனர் என்ற கூற ஆசைப்பட்ட போதிலும் அதற்கு நேர் மாறாக நிகழ்ச்சி அமைந்ததுவே வருத்தத்திற்கு உரிய ஒன்றாகும். ஆம் இதுவரை இல்லாத அளவு பல சொதப்பல்களுடன் பலரையும் முகம் சுளிக்க வைத்தது கலைஞர் நூற்றாண்டு விழா.

ரஜினி கமல் வந்தாலே அனைவரும் வந்து விடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். அடுத்த தலைமுறையான அஜித் விஜய் அவர்கள் விழாவை எட்டி கூட பார்க்கவில்லை. அதற்கும் மேல் கலைஞர் வீட்டு சம்பந்தியான சீயான் விக்ரமோ உறவுக்காரராக இல்லாமல் நடிகராகவாது கலந்து கொண்டிருக்கலாம் அதுவும் இல்லை.

Also read: பாதி கூட நிறையல, காத்து வாங்கிய இருக்கைகள்.. ரஜினி, கமல் வந்தும் வெறிச்சோடி போன கலைஞர் 100

இதற்கு முதல் காரணம்  மேற்சொன்ன பனிரெண்டு சங்கங்களுக்கு இடையே ஒருமித்த கருத்தோ சகிப்புத்தன்மையோ ஒற்றுமையோ இல்லாததே ஆகும். இந்த விழாவில் நடனமோ நாடகமோ நடித்த தனது இமேஜ் குறைந்து விடும் என்று பயம் வேறு ஒரு பக்கம் இதனாலேயே சில நடிகர்கள் இந்த விழாவை புறக்கணித்தனர்.

வந்த மூத்த நடிகர்கள் பலர் கண்டுகொள்ளாமல் பின் வரிசைக்கு புறக்கணிக்கப்பட்டனர். நடிகர்களை விட்டுத்தள்ளுங்கள் கலைஞரின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆவது வந்தார்களா? அவரின் பேரனும் நடிகருமான அருள்நிதி இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

சமூகத்திற்கு மாற்றத்தை கொண்டு வந்த கலைஞர் தன் குடும்பத்தையும் ஒற்றுமையாக இருக்க வழிவகை செய்திருக்கலாம். குடும்பத்து உறுப்பினர்களை கூப்பிடாதது நட்புடன் மனக்கசப்பு வளர்ந்து வரும் கலைஞர்களை மதித்திடாத மாண்பு என உதயநிதி அவர்களும் கலைஞர் நூறின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார் என கூறப்படுகிறது.

Also read: கலைஞர் விழாவில் நடந்த தப்புக்கு காரணமான 5 விஷயங்கள்.. இதுவரை பார்க்காத அவமானத்தை சந்தித்த ரஜினி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்