ஹிந்தியில் ரீமேக்காகும் விக்ரம் வேதா.. மாதவன், விஜய் சேதுபதியாக களம் இறங்கும் பாலிவுட் மாஸ் ஹீரோஸ்

மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம் வேதா. 2017 ல் வெளியான இத் திரைப்படம் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

நல்ல விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சையப் அலிகான் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு பாலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அபுதாபியில் தொடங்கி முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு லக்னோவில் தொடங்கியுள்ளது. இதில் ரித்திக் ரோஷன் பங்கேற்று நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா ஆப்தே நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கை தமிழ் பதிப்பை இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி இருவரும் இணைந்து மீண்டும் இயக்குகின்றனர். இந்த படத்தை தமிழைப் போலவே ஹிந்தியிலும் சிறப்பாக வழங்குவோம் என்று இருவரும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்படம் தமிழைப் போலவே ஹிந்தியிலும் ஒரு மேஜிக்கை செய்யும் என்றும், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்ற வேலைகள் அனைத்தும் முடிந்து படத்தை அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளதாக தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது. இப்படத்தை தமிழில் பார்த்த ரசிகர்கள் ஹிந்தியில் எப்படி வர உள்ளது என்பதை பார்க்க ஆவலாக காத்திருக்கின்றனர். தற்போது ஹிருத்திக் ரோஷன் இயக்குனர்களுடன் இணைத்திருக்கும் போட்டோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

hrithikroshan
hrithikroshan
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்