பாலா படம் என்றாலே நடிகர்கள் எல்லாம் அஞ்சி நடுங்குவார்கள். அந்த அளவுக்கு மனுஷன் நடிகர், நடிகைகளை வாட்டி வதக்கி விடுவார். தனக்கு அந்த காட்சி சரியாக வரும் வரை எத்தனை டேக்குகள் போனாலும் தொடர்ந்த அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் எடுப்பாராம்.
அதுமட்டுமா படப்பிடிப்பில் நடிகர்களை கண்டபடி திட்டுவாராம். சில சமயங்களில் உச்சகட்ட கோபத்தில் கை நீட்டவும் செய்துள்ளார் என்ற செய்தியும் வெளியானது. ஆனால் இது எல்லாத்துக்குமே காரணம் தனது படம் நன்றாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் தான் பாலா இப்படி செய்கிறார்.
ஆனால் பாலாவின் படங்களில் எப்போதுமே ஒரு சோகம் நிறைந்திருக்கும். அதாவது படத்தின் முடிவில் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தும் படி எதிர்மறையாக தான் படத்தை முடித்து இருப்பார். இந்நிலையில் ஆரம்பத்தில் பாலாவின் படங்கள் வரவேற்பு பெற்றாலும் சில காலமாக அவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனால் பல நடிகர்களும் இவரது இயக்கத்தில் நடிக்க மறுத்து உள்ளனர். ஆனால் தன்னை வளர்த்துவிட்ட இயக்குனரை மறக்கக் கூடாது என சூர்யா, பாலா படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.
ஆனால் படப்பிடிப்பில் சூர்யா கொஞ்சம் மெத்தனமாக நடந்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த பாலா ஆத்திரமடைந்து சில வார்த்தைகளை விட்டுள்ளார். எல்லோர் முன்னிலையிலும் இப்படி திட்டியதால் சூர்யாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் படப்பிடிப்பு தளத்தில் இருந்த உடனே கிளம்பிவிட்டார்.
இதனால் பாலாவுக்கு சொந்த வாழ்க்கையிலும் பிரச்சனை என்றால் தற்போது திரை வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சனை எழுந்துள்ளது. இந்நிலையில் சூர்யாவை எப்படி சமாதானப்படுத்தி மீண்டும் படப்பிடிப்புக்கு அழைத்து வருவது என்ற யோசனையில் உள்ளாராம் பாலா.