Kavin : 14 உயிர் போச்சு, படுத்த படுக்கையான ஸ்டார் கவின்.. சரியான நேரத்தில் உதவிய உயிர் நண்பன்

kavin-cinemapettai
kavin-cinemapettai

கவினின் ஸ்டார் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அவர் கடந்து வந்த பாதையை பற்றி பலருக்கும் தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கிறது. குறிப்பாக படுத்த படுக்கையாக கவின் ஒரு மாத காலம் இருந்திருக்கிறார்.

அதாவது கவினின் சகோதரி திருமணம் மூன்று மாதத்தில் நடக்க இருந்தது. அதற்குள் கவினின் பாட்டி தவறியதால் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்துவிட்டு குடும்பமாக வீடு திரும்பி இருக்கின்றனர். அப்போது காரில் கவினின் சகோதரி முன்னும், கவின் பின்னால் இருக்கும் இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

இந்த சூழலில் தஞ்சாவூர் தாண்டிய பிறகு கவின் முன்னாடி உட்கார்ந்து கொள்வதாக கூறியிருக்கிறார். மேலும் கார் சிறிது தூரம் சென்ற பிறகு மேலூர் பைபாஸில் ஒரு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதில் கவினுக்கு மட்டும் சரியான காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அவரது கால் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது.

கவினுக்கு உதவிய பிக் பாஸ் பிரதீப்

அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் கவின். சகோதரியின் திருமணம் விரைவில் இருப்பதால் குடும்பம் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் கவினின் அருகில் இருந்து பார்த்துக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது தான் கவினின் உயிர் நண்பனான பிக்பாஸ் பிரதீப் அவர்களுடன் இருந்திருக்கிறார்.

நிற்க கூட முடியாத கவின் அந்த நிலைமையில் இருந்து தேறி வருவதற்கு பிரதீப் முக்கிய காரணமாம். ‌ கிட்டத்தட்ட பத்து மாதம் கவினால் நன்றாக நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இப்போது கூட அதிக நேரம் நடனம் ஆடினால் அவரது காலில் வலி ஏற்பட்டுமாம்.

மேலும் அதன் பிறகு போலீசாரிடம் பேசிய போது தான் கவினுக்கு தெரிந்ததாம் மேலூர் பைபாஸில் அதே இடத்தில் ஆக்சிடென்ட் நடந்து14 உயிர் போனது. இவ்வாறு அந்த இடத்தில் அடிக்கடி நடக்கும் விபத்தில் அதிர்ஷ்டவசமாக கவின் மட்டும் உயிர் தப்பினாராம். மேலும் அந்த விபத்தில் இருந்து தன்னை மீட்டது பிரதீப் தான் என்று பலமுறை கவின் கூறி இருக்கிறார்.

Advertisement Amazon Prime Banner