T.Rajenthar: இளையராஜா பாட்டையே டம்மி ஆக்கிய டி.ஆர் பாட்டு.. வேற வழியே இல்லாமல் இசைஞானி எடுத்த முடிவு

T.Rajenthar: ‘வைகை கரை காற்றே நில்லு, வஞ்சி தனை பார்த்தால் சொல்லு’ , ஏசுதாஸ் குரலில் இந்தப் பாடலை ரசிக்காதவர்களே இல்லை. திடீரென இந்த பாட்டை ரசித்து கேட்கும் போது ஒரு நிமிஷம் இளையராஜாவின் கைவண்ணம் என்று பல பேருக்கு தோணும்.

ஆனால் இந்தப் பாட்டுக்கு இசை அமைத்தவர் டி ராஜேந்தர். இன்றைய காலகட்டத்தில் டி ஆர் பேசும் எதுகை மோனை வசனங்கள் வைத்து அவரை காமெடி பீஸாக சில பேர் சித்தரிக்கிறார்கள். உண்மையிலேயே டி ராஜேந்தர் ஒரு பிறவி கலைஞன்.

சினிமாவைப் பற்றி முறைப்படியாக அவர் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எல்லா விஷயத்தலுமே சிறந்து விளங்கினார். கதாநாயகன் மற்றும் கதாநாயகி மரத்துக்கு மரம் டூயட் பாடி கொண்டிருந்த காலகட்டம் அது.

அப்போது எதார்த்தமாக ஒரு கதைக்களம், காதலிப்பவர்களால் நேரில் கூட பேசிக்கொள்ள முடியாது. ஏன் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூட தெரியப்படுத்த முடியாது. அந்த உண்மை சூழ்நிலையை திரையில் காட்டியதால் தான் டி ராஜேந்தர் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

ஒரு தலை ராகம், ரயில் பயணங்களில், உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம் என அடுத்தடுத்து தன்னுடைய ஹிட் படங்களை எடுத்து தமிழ் சினிமாவை புரட்டி போட்டு விட்டார். யாருடா இந்த ஹீரோ என அப்போதைய முன்னணி ஹீரோக்கள் மிரண்டு பார்த்தார்கள்.

இப்படி படம் இயக்கினாலும் வெற்றி பெறுமா என பெரிய பெரிய இயக்குனர்கள் கூட மிரண்டு போனார்கள். ஏன் கமல் மற்றும் ரஜினி படங்களுடன் மோதி டி ராஜேந்தர் படங்கள் சூப்பர் ஹிட் அடித்த சம்பவமும் நடந்தது. இவ்வளவுதான் அவர் செய்த சாதனையா என்று நீங்கள் நினைத்தால், அது தான் கிடையாது.

ராஜா பாட்டை டம்மி ஆக்கிய டி.ஆர் பாட்டு

இசை உலகின் பிரம்மாவாக பார்க்கப்படும் இசைஞானி இளையராஜாவே டி ராஜேந்தரின் பாட்டுகளை கேட்டு மிரண்டு போயிருக்கிறார். இளையராஜாவின் பாடல்கள் ஒருவிதமான இசை என்றால், டி ராஜேந்தரின் பாடல்கள் எதார்த்தமானவை.

கூடையில கருவாடு, வசந்தம் பாடி வர, நான் ஒரு ராசியில்லா ராஜா என்று தன்னுடைய பாடல்கள் மூலம் பட்டித் தொட்டி எங்கும் வெற்றி பெற்றார் டி ராஜேந்தர்.’ அட பொன்னான மனசே பூவான மனசே வைக்காத பொண்ணு மேல ஆசை’ இந்த பாட்டுக்கு இணையாக இன்று வரை ஒரு காதல் தோல்வி பாட்டை கண்டுபிடிக்க முடியாது.

திரும்பிய பக்கமெல்லாம் இளையராஜா பாட்டு கொடிகட்டி பறந்து கொண்டிருந்த சமயத்தில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை டி ராஜேந்தர் ஆட்சி செய்தார். எந்த பக்கம் திரும்பினாலும் டி ராஜேந்தர் பாடல்கள் தான் ஒலித்தது. ஒரு கட்டத்தில் இளையராஜா தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டார்.

அப்போது அவரிடம் தயாரிப்பாளர் ஒருவர் எதற்கு திடீர்னு சம்பளத்தை ஏத்திட்டீங்க அப்படி என்று கேட்கும்போது, இசைனா என்னன்னு தெரியாத ஒருத்தர் இப்படி இசையமைத்து சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

அப்படி இருக்கும்போது நான் ஏன் உயர்த்த கூடாது என்று கேட்டாராம். அந்த அளவுக்கு இளையராஜாவையே கதி கலங்க வைத்திருக்கிறார் டி ராஜேந்தர். தன்னுடைய காதல் மனைவி உஷாவை பிரிந்திருந்த நேரத்தில் அவர் எழுதிய பாடல் தான் வைகை கரை காற்றே நில்லு.

“மன்னன் மனம் வாடுதென்று மங்கை தானே தேடுது என்று காற்றே பூங்காற்றே நீ காதோரம் போய் சொல்லு.” இப்படி ஒரு பாடல் வரியை எழுதி, அதற்கு இசையையும் உயிராக கொடுக்க முடியும் என்றால் அது டி ராஜேந்தருக்குத்தான் சாத்தியம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்