தமிழ் புத்தாண்டுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த சூர்யா.. போஸ்டரிலேயே மிரட்டும் கங்குவா

Actor Suriya: இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பல புது பட அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் கோட் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது.

போஸ்டரிலேயே மிரட்டும் கங்குவா

kanguva-suriya
kanguva-suriya

அதேபோல் லோகேஷ் தன் தயாரிப்பின் அடுத்த பட அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில் சூர்யாவும் தன் பங்குக்கு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

ஆனால் இது ரசிகர்கள் எதிர்பாராத டபுள் ட்ரீட்டாக இருக்கிறது. அதாவது அந்த போஸ்டரில் சூர்யா இரு தோற்றங்களில் இருக்கிறார்.

டபுள் ட்ரீட் கொடுத்த சூர்யா

ஒன்று பீரியட் கால தோற்றத்தில் கையில் வாளோடு வெறித்தனமாக இருக்கும் சூர்யா. மற்றொன்று இந்த காலத்திற்கு ஏற்றவாறு படு ஸ்டைலாக கையில் துப்பாக்கியோடு இருக்கும் சூர்யா.

ஏற்கனவே இப்படம் எதிர்காலம், இறந்த காலம் கதையை கொண்டது என தகவல்கள் வெளியானது. தற்போது போஸ்டரை பார்க்கும்போது அது உறுதியாகி இருக்கிறது.

அந்த வகையில் பல கோடி கொட்டி எடுக்கப்பட்ட இப்படம் இந்த வருடம் திரைக்கு வரும் என்ற அறிவிப்பையும் பட குழு வெளியிட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமான தேதி வெளியிடப்படவில்லை.

இருப்பினும் இந்த போஸ்டரே எங்களுக்கு மிகப்பெரிய கிஃப்ட் என சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆக மொத்தம் இந்த வருடம் கோட், தலைவரின் வேட்டையன், கங்குவா, தனுஷின் ராயன் என பல படங்கள் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்