சுதா கோங்குராவை டீலில் விட்ட மாறன்! இயக்குனரிடம் விஜய் ரூட்டை ஃபாலோ பண்ண சொல்லும் சூர்யா..

Suriya joins hands with Karthik Subbaraj leaving Sudha Kongara: தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி தன்னுடைய மிகை பங்களிப்பால் கதாபாத்திரத்தை மெருகேற்றி வெற்றியை பதிவு செய்தவர் சூர்யா.

சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபிதியோல், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் சரித்திரத்தை பின்புலமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் கங்குவா.

மிரட்டும் லுக்கில் சூர்யா பல வேடங்களில் திரையில் தோன்ற உள்ளார். பான் இந்தியா மூவியாக பல மொழிகளிலும் ரெடியாகும் கங்குவாவை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அடுத்ததாக சூர்யா, சூரரைப் போற்று புகழ் சுதா கோங்குராவுடன் சூர்யா 43 எனப்படும் புறநானூறு என்ற திரைப்படத்திற்கு தயாரானார்.

அதற்கான அதிகார அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன பின்பும் படப்பிடிப்பு சுணக்கமுடனே இருந்து வந்தது.

ஒரு கட்டத்தில் சூர்யா மற்றும் சுதா கோங்குராவிற்கு இடையேயான சில கருத்து முரண்பாடுகளால் புறநானூறு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கதையில் கூறிய மாற்றங்கள், ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடையாதது என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு சுதா கோங்குராவுடனான படத்திலிருந்து தற்காலிகமாக விலகி வந்தார் சூர்யா.

அதிரடி அறிவிப்பாக சூர்யா, ஜிகர்தண்டா மற்றும் தலைவரின் பேட்ட புகழ் கார்த்திக் சுப்புராஜ் உடன் கைகோர்க்க உள்ளது இவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆம் கார்த்திக் சுப்புராஜ் ஒரு தரமான கமர்சியல் கதையை ரெடி பண்ணி சூர்யாவிற்கு கதை சொல்ல, உடனே ஓகே சொல்லி, ஒப்பந்தம் போட்டு விட்டாராம் சூர்யா. இந்த கதை ஏற்கனவே சிம்புக்கு  சொல்லப்பட்டதாம்.

வருடத்திற்கு மூன்று கமர்சியல் படங்கள் என திட்டம் தீட்டிய சூர்யா

ஆரம்ப காலங்களில் நேருக்கு நேர், பெரியண்ணா போன்ற இரு ஹீரோ சப்ஜெக்ட்டையே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் சூர்யா.

அவருடன் நடித்தவர்கள் உச்சத்திற்கு செல்ல தரமான வெற்றியை பதிவு செய்ய நீண்ட காலம் போராட வேண்டி இருந்தது.

தற்போது விஜய் அரசியலுக்கு சென்றதால் அவருடைய இடத்தை பிடிக்கும் நோக்கில் இனி கமர்சியல் மூவிஸ் ஆக தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளார் சூர்யா.

கங்குவா மற்றும் கர்ணா போன்ற சரித்திர கதையம்சம் கொண்ட படங்களை இதோடு நிறுத்திக் கொண்டு தளபதி விஜய்யைப் போன்று கமர்சியல் படங்களில் கவனம் செலுத்த உள்ளார்.

வருடத்திற்கு மூன்று கமர்சியல் படங்கள் ஆவது நடித்தே தீர வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறாராம் சூர்யா.

விஜய்யின்  இடத்தை பிடிக்க வளர்ந்த, வளரும் என பல தரப்பு நடிகர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.

 

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்