முன்னணி நடிகர்களின் 6 படங்களை தட்டி தூக்கிய சன் டிவி.. டிஆர்பி ரேட்டிங்கை தக்கவைக்க தொக்காக கிடைத்த ஜாக்பாட்

Top 5 Actors Movies Satellite Rights Got Sun Tv:  ஒவ்வொரு வருஷமும் முன்னணி நடிகர்களின் படங்கள் மறக்க முடியாத அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடும். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜெயிலர், துணிவு, லியோ போன்ற படங்கள் ரிலீஸ் ஆகி வசூல் அளவில் சாதனை படைத்து விட்டது. அதே மாதிரி இந்த ஆண்டும் வசூல் அளவிலும் ஜெயித்துக் காட்டி ஆட்டநாயகன் பட்டத்தை தூக்க வேண்டும் என்று பல நடிகர்கள் போராடி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு எக்கச்சக்கமான படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. இதில் கண்டிப்பாக மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து விடும். திரையரங்குகளிலும் பார்ப்பதற்கு குடும்பத்துடன் எக்கச்சக்கமானவர்கள் வருவார்கள். இதனால் அவர்கள் படத்திற்கு எப்போதுமே நஷ்டம் வராத அளவிற்கு லாபம் கிடைத்து விடும்.

அதனால் அப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றி விட்டது. அப்படி இந்த ஆண்டு வருகிற புதுப்படங்களில் எந்த படத்தை வாங்கி இருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம். இந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் லால் சலாம் மற்றும் வேட்டையன் படங்களின் தயாரிப்பாளராக இருக்கும் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவிக்கு கொடுத்திருக்கிறார்.

Also read: அஜித்துக்கு தொடர்ந்து முட்டு கொடுக்கும் கும்பல்.. இறப்பில் கூட இப்படி ஒரு விளம்பரமா?

இதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் விடாமுயற்சி படத்தின் சேட்டிலைட் உரிமையும் சன் டிவி நிறுவனம் வாங்கி இருக்கிறது. அடுத்து விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் 68வது படமான GOAT படத்தையும் சன் டிவி நிறுவனம் வாங்கிவிட்டது.

அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ஆக்ரோஷமான கதையும் வித்தியாசமான லுக்குடன் மிரட்ட வரும் கேப்டன் மில்லர் படத்தின் சேட்டிலைட் உரிமையும் சன் டிவி நிறுவனம் பெற்றுவிட்டது. மேலும் கௌதமேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் உரிமையும் சன் டிவி நிறுவனம் வாங்கிவிட்டது. இப்படி இந்த ஆண்டில் வெளிவரும் முக்கியமான படங்களை கைப்பற்றி தன்னுடைய டிஆர்பி ரேட்டிங்கை தக்க வைக்க தொக்காக ஜாக்பாட் கிடைத்துவிட்டது.

Also read: ஜெயலலிதா, விஜயகாந்த் நிலைமை உங்களுக்கு வேண்டாம்.. அஜித்துக்காக பிரேமம் இயக்குனர் போட்ட அதிர்ச்சி பதிவு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்