Actor Vijay: விஜய் இப்போது கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். செப்டம்பர் மாதம் வெளிவர இருக்கும் இப்படத்தை அடுத்து தளபதி 69 ப்ராஜெக்ட்டும் தொடங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் சன் டிவி விஜய் படத்திற்கு ஒரு செக் வைத்திருக்கிறது. அதாவது கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை இவர்கள் தான் வாங்குவதாக இருந்தது.
கிட்டத்தட்ட 52 கோடிக்கு பிசினஸும் பேசப்பட்டது. ஆனால் திடீரென அவர்கள் எங்களுக்கு இந்த படம் வேண்டாம் என்று கூறிவிட்டார்களாம்.
விஜய்க்கு செக் வைத்த சன் டிவி
ஏனென்றால் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் தளபதி 69 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருந்தது. ஆனால் திடீரென அது அப்படியே டிராப் ஆனது.
விசாரித்ததில் விஜய் தான் சன் பிக்சர்ஸ் வேண்டாம் என்று மறுத்து விட்டாராம். இதனால் கடுப்பான சன் டிவி நிர்வாகம் அப்ப கோட் படமும் எங்களுக்கு வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள்.
இந்த இரண்டு படங்களையும் சொந்தமாக்க வேண்டும் என்பதுதான் சன் டிவியின் பிளானாக இருந்திருக்கிறது. ஆனால் விஜய் அதற்கு முட்டுக்கட்டை போட்டதால் தற்போது சன் நிறுவனம் இப்படி ஒரு செக் வைத்து இருக்கிறது.