பிபி ஜோடியில் கப்பு ஜெயிச்சாலும் தீராத மன வேதனையில் சுஜா வருணி.. வருத்தத்தில் குடும்பம்

விஜய் டிவி ஷோக்களில் மிக முக்கியமான ஒன்று பிபி ஜோடிகள். இந்த சீசனை ராஜு மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கினார்கள். மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் டான்ஸ் மாஸ்டர் சதிஷ் நடுவர்களாக இருந்தனர்.

இதில் அபிஷேக்-சுருதி, ஐக்கிபெர்ரி-தேவ், சுஜா-சிவகுமார், ஆரத்தி-கணேஷ், தாமரை-பார்த்தசாரதி, வேல்முருகன்-இசைவாணி , அமீர்-பாவனி என பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இதில் அமீர்-பாவனி, சுஜா-சிவகுமார் முதல் பரிசை பகிர்ந்து கொண்டனர்.

Also Read: காதலை உறுதி செய்த பிக்பாஸ் பாவனி, அமீர்.. விஜய் டிவி உருவாக்கிய அடுத்த ஜோடி

சுஜா ஏற்கனவே திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து, அதன் பிறகு பிக்பாஸ் சீசன் இரண்டில் கலந்து கொண்டார். இவர் சிவகுமாரை 11 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிவகுமார் நடிகை ஸ்ரீப்ரியாவின் சகோதரி மகன். இவர்களுக்கு அத்வைத் என்னும் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் பிபி ஜோடியில் பேய்-கடவுள் சுற்றில் சுஜா நடனமாடி கீழே விழுந்திருக்கிறார் , அப்போது அவர் தன்னை அறியாமலேயே சிறுநீர் கழித்து விட்டாராம் , இதனால் மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட போது சுஜா கர்ப்பமாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் இந்த தம்பதிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

Also Read: அமீரிடம் மயங்கிப்போன பாவனி.. பிபி ஜோடிகள் மேடையில் நினைத்ததை சாதித்துக் காட்டிய மாஸ்டர்

மருத்துவ ஆலோசனைப்படி சுஜா மீண்டும் நடனமாடி இருக்கிறார். டான்ஸ் ப்ராக்டீசின் போது சுஜாவுக்கு ப்ளீடிங் ஆகிவிட்டதாகவும், மருத்துவமனைக்கு சென்ற போது குழந்தை கலைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.

இரண்டாவது முறை கர்ப்பமாகி இருப்பதால் சந்தோசமாக இருந்த இந்த தம்பதிக்கு இப்படி ஒரு தகவல் மிகுந்த மன வலியை கொடுத்திருக்கிறது. பிபி ஜோடிகள் முடிந்த பிறகு இவர்கள் இந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.

Also Read: 1000 கோடி தூக்கி கொடுத்தம் மறுத்த ஹீரோ.. என்னப்பா இது பிக் பாஸ்க்கு வந்த சோதனை!

Next Story

- Advertisement -