வயிறு குலுங்க சிரிக்க வைத்து வெற்றிகண்ட 6 படங்கள்.. வசூல் வேட்டையாடிய சுந்தர் சி

இயக்குனர்கள் தங்களது படங்களை காதல், ஆக்சன், திரில்லர் போன்ற ஜானரில் எடுத்தாலும் அதில் சில காட்சிகள் மட்டுமே காமெடி இடம் பெற்றிருக்கும். ஆனால் முழுவதும் காமெடியை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட படங்கள் பல ஹிட் அடித்துள்ளது. அவ்வாறு காமெடியால் வெற்றி பெற்ற ஏழு படங்களை பார்க்கலாம்.

தில்லு முல்லு : கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தில்லு முல்லு. இப்படத்தில் ரஜினிகாந்த், தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி ஆகிய மூவரின் காம்பினேஷனில் வரும் நகைச்சுவை காட்சிகளில் சிரிக்காமல் யாராலும் இருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் ரஜினியின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் உருவான தில்லு முல்லு படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

பாட்டி சொல்லை தட்டாதே : பாண்டியராஜன் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே நகைச்சுவையாக தான் இருக்கும். அந்தவகையில் பாண்டியராஜன், மனோரமா இணைந்து நடித்த பாட்டி சொல்லை தட்டாதே படத்தின் காமெடிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அது மட்டுமல்லாமல் அந்த நகைச்சுவை காட்சிகள் பெரும் அளவில் வரவேற்பு பெற்றது.

உள்ளத்தை அள்ளித்தா : சுந்தர் சி-யின் பெரும்பாலான படங்கள் நகைச்சுவை சாயலில் தான் இருக்கும். அதேபோல் அவருடைய இயக்கத்தில் காமெடி கலந்த காதல் படமாக வெளியானது உள்ளத்தை அள்ளித்தா. இப்படத்தில் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக்காகவே இப்படம் வெற்றி பெற்றது.

மைக்கேல் மதன காமராஜன் : கமலஹாசன் மற்றும் கிரேசிமோகன் காம்போவில் உருவாகிய படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது. அந்த வகையில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கிரேசி மோகன் வசனத்தில் கமலஹாசன் நான்கு வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இப்படத்திற்கு கூடுதல் நகைச்சுவை சேர்த்தது நடிகர் நாகேஷ்.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி : காமெடி நடிகராக இருந்த வடிவேலு முதன்முதலாக கதாநாயகனாக நடித்த படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. இப்படத்தில் வடிவேலு இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இப்படம் வடிவேலு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

கலகலப்பு : சுந்தர் சி இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கலகலப்பு. விமல், சிவா, ஓவியா, அஞ்சலி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் முழுவதும் காமெடி ஜானரில் எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தை குஷ்பூ தயாரித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற காமெடிகாகவே இப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்