56 வயதில் ஸ்டாலினுக்கு கிடைத்த பதவி.. 45 வயதிலேயே கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின், என்ன பொறுப்பு தெரியுமா?

சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என்று பிசியாக வலம் வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலிலும் ஒரு கை பார்த்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி அதில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து இன்று தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது.

34 அமைச்சர்களை கொண்ட இந்த அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் 35 ஆவது அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் பதவியேற்று ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் இன்று அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also read: நாங்க கேட்டும் அவங்க தரல.. வாரிசு பஞ்சாயத்து குறித்து மௌனம் கலைத்த உதயநிதி

இதற்கு முன்னதாக கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவருடைய மகன் ஸ்டாலினுக்கு 56 வயதில்தான் அமைச்சர் என்னும் பொறுப்பை வழங்கினார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் தன் அப்பாவையே மிஞ்சும் வகையில் தன்னுடைய 45 வது வயதிலேயே அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார்.

அந்த வகையில் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் முதல் வேலையாக அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்த இருக்கிறார். அதை தொடர்ந்து அவர் தலைமைச் செயலகத்தில் சென்று கையெழுத்திட்டு பொறுப்பேற்க இருக்கிறார்.

Also read: உதயநிதியை போல் உருவாகும் அடுத்த வாரிசு.. சம்பளம் கூட கொடுக்காமல் இழுத்தடிக்கும் பரிதாபம்

தற்போது அமைச்சராகி இருக்கும் உதயநிதிக்காக அரசு கார், புதிய அறை என்று அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கு துறை ஆகிய பொறுப்புகள் ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த விஷயம் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சிக்க வைத்துள்ளது.

அந்த வகையில் டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் அரசு அதிக அவசரம் காட்டுவதாக கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்டாலினை கட்சியில் தலைவராக்குவதற்கான ஒரு முன்னோட்டம் தான் இந்த அமைச்சர் பதவி என்றும் விமர்சித்திருக்கிறார். அவர்களுடைய இந்த கருத்துக்கு திமுக தொண்டர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Also read: உச்சகட்ட வளர்ச்சியால் ஆணவத்தில் ஆடும் யோகி பாபு.. விஷால், உதயநிதியை சேர்த்து அசிங்கப்படுத்திய மேடை

- Advertisement -spot_img

Trending News