ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

காமெடிக்கு குட்பை சொன்ன சூரி.. சிவகார்த்திகேயனால் குவியும் வாய்ப்பு

திறமை இருந்தால் வெற்றி நிச்சயம் என்று எத்தனையோ பேர் சொன்னாலும் நம் கண்கூடாக சில பேரை பார்த்து வருகிறோம். அப்படித்தான் காமெடி நடிகராக வந்த சூரி சமீபத்தில் வெளிவந்த விடுதலை படத்தின் மூலம் யாருமே எதிர்பார்க்க முடியாத அளவிற்கு கச்சிதமான கேரக்டரில் நடித்து ஒரு ஹீரோ என்ற பாணியை பிடித்து விட்டார்.

ஆனாலும் சில பேர் இவரை நக்கலாக பேசி வந்தார்கள். எப்படி என்றால் இப்படித்தான் சில பேர் காமெடியில் நல்ல பேரை வைத்துக்கொண்டு நடிகராக வரவேண்டும் என்ற ஆசையில் வந்துட்டு படாதபாடு பட்டு ஹீரோவாக நிலைத்து நிற்க முடியாமல் இருக்கிறார்கள். மறுபடியும் காமெடியாகவும் வர முடியாமல் ரெண்டு கிட்ட நிலைமையில் இருந்து தவித்து வருகிறார்கள்.

Also read: 11 நாட்களில் விடுதலை படத்தின் மொத்த வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் செய்த சாதனை

அப்படித்தான் இவர் நிலைமையும் ஆகும் என்று வாய்க்கு வந்தபடி சில பேர் பேசி இருக்கிறார்கள். ஆனாலும் இதை முறியடிக்கும் வகையில் சூரிக்கு தோள் கொடுக்கும் தோழனாக கை கொடுக்கிறார் சிவகார்த்திகேயன். விடுதலை படத்திற்குப் பிறகு அவர் நடிக்க இருக்கும் கொட்டு காளி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக கமிட் ஆயிருக்கிறார்.

இப்படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே பண பிரச்சனையில் நெருக்கடியில் இருக்கும் பொழுது சூரிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஒரு பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம். மேலும் இப்படத்தை வினோத் ராஜ் இயக்குகிறார். படத்தின் பூஜை வேலைகள் முடிந்த நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வந்த நிலையில் இதற்கான எதிர்பார்ப்புகள் விடுதலை படத்தை விட அதிகமாக இருக்கின்றன.

Also read: சிவகார்த்திகேயனை பழி தீர்க்க களமிறங்கும் தனுஷ்.. இந்த வாட்டி சும்மா விடுறதா இல்ல

இதைத் தொடர்ந்து இவருக்கு ஹீரோவாக பல பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. அடுத்து இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் விடுதலை பார்ட் 2, ஏழு கடல் ஏழுமலை என்ற படத்தில் ஹீரோவாகவும், அடுத்ததாக விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் துரை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் கமிட்டாய் இருக்கிறார்.

இதனால் இவர் மறுபடியும் காமெடியனாக நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. இவருக்கு ஹீரோ கேரக்டர் கச்சிதமாக பொருந்துவதால் இவரை இனிமேல் ஒரு ஹீரோவாக தான் பார்க்க முடியும். அதே மாதிரி சில பேருக்கு சில கேரக்டர்கள் உடனே பொருந்தாது ஆனால் இவரை இதுவரை காமெடியானாக பார்த்துட்டு சீரியஸ் கேரக்டரிலும் பார்த்தாலும் இவருக்கு அது நன்றாகவே செட் ஆகுது.

Also read: சைலண்டாக சிம்புவை காலி செய்யும் புது ஹீரோ .. சிலம்பரசனுக்கு காமெடி நடிகரால் வந்த சோதனை!

- Advertisement -

Trending News