சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விரைவில் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளி.. கோமாளிகளாக களமிறங்க உள்ள 7 பிரபலங்கள்

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் திரை கலைஞர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் தற்பொழுது பிரபலமாக இருக்கக்கூடிய மற்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியும் ஒன்று.

அதிலும் சுவையான உணவு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அப்படிப்பட்ட சமையலை நகைச்சுவையாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடியவர்களை கொண்டு நடத்தப்படுகிறது. இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்பொழுது வரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.

Also Read: அசீம் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது.. விஜய் டிவிக்கு எதிராக இணையத்தில் கொந்தளித்த கூட்டம்

இதனைத் தொடர்ந்து சீசன் 4  எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்பொழுது குக் வித் கோமாளி சீசன் 4 ஜனவரி 28 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக களமிறங்க உள்ள பிரபலங்களின் லிஸ்ட் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி பயங்கர ட்ரண்ட் ஆகி வருகிறது.

இதில் சமையல் கலைஞர் நிபுணர்களான செஃப் தாமு மற்றும் செப் வெங்கடேஷ் பட் தலைமையில் இந்நிகழ்ச்சியானது நடத்தப்படுகிறது. தற்பொழுது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடியவர்களை கோமாளிகளாக களம் இறக்க முடிவு செய்துள்ளனர். அதிலும் ஏற்கனவே இருந்த கோமாளிகளை ஓரம் கட்டி விட்டு தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ளவர்களை கோமாளிகளாக புக்கிங் செய்துள்ளனர்.

Also Read: பொண்டாட்டிங்க தொல்லையால் மார்க்கெட் இழந்த நடிகர்.. பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்தும் ப்ரோஜனம் இல்ல

தற்பொழுது புதிதாக களம் இறங்க உள்ள அந்த 7 கோமாளிகளான மணிமேகலை, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், சுனிதா, மோனிஷா பிளெஸ்ஸி, ரவீனா தாஹா, ஓட்டேரி சிவா போன்ற பிரபலங்களை குக் வித் கோமாளி சீசன் 4 புதிதாக களம் இறக்க உள்ளனர். அதிலும் ஜி.பி முத்து டிக் டாக் மூலம் பேமஸ் ஆகி பிக் பாஸ் வரை சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளிலும் பங்கு பெற உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு உதவி செய்வதற்காக பிரபலங்களை கோமாளிகளாக களமிறக்கப்பட்டுள்ளனர். அப்படி களம் இறங்கும் கோமாளிகள் உதவி செய்கிறார்கலோ இல்லையோ கண்டிப்பாக தங்களது நகைச்சுவையின் மூலம் அரங்கத்தையே கலகலப்பாகி விடுகின்றனர். அப்படி எந்த பிரபலம் கோமாளிகளாக மக்கள் மனதை ஆக்கிரமிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read: மைனா நந்தினி வாங்கிய சம்பளம்.. இரவோடு இரவாக துரத்தினாலும் லட்சங்களை அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்

- Advertisement -

Trending News