ரஜினியின் முழு நீள 6 காமெடி படங்கள்.. ஒரு மீசையை வைத்து தேங்காய் சீனிவாசனுக்கு பட்டைய போட்ட சூப்பர் ஸ்டார்

பொதுவாகவே நடிகராக நடிக்கும் ஹீரோவுக்கு காமெடி செட்டே ஆகாது என்று சொல்லும்படி சில ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஆனால் அதற்கு விதிவிலக்காக ரஜினி படங்கள் முழு நேர காமெடியாகவும் இருக்கும் அதே நேரத்தில் அவர் நகைச்சுவையிலும் பின்னி பெடல் எடுத்து இருப்பார். அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

தம்பிக்கு எந்த ஊரு: ராஜசேகர் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு தம்பிக்கு எந்த ஊரு திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, மாதவி, சுலோக்ஷனா, செந்தாமரை ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி பணத்தின் அருமையை தெரியாமல் ஊதாரித்தனமாக செலவழிக்கும் ஒரு கேரக்டரில் இருப்பதால் ஒழுக்கத்தை கற்றுக் கொள்வதற்காக ஒரு வருடத்திற்கு கிராமத்தில் வாழ வேண்டும் என்று நிர்பந்தனை ஏற்படும். அதே மாதிரி அந்த கிராமத்திற்கு சென்று வாழும்போது இவர் இருக்கும் வீட்டு கட்டிலில் புக் படித்துக் கொண்டிருக்கும் போது அங்கே பாம்பு வரும்போது அதை பார்த்து இவர் கொடுக்கும் ரியாக்ஷன் ரசிக்கும்படியாக அமைந்திருக்கும்.

வீரா: சுரேஷ் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வீரா திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, மீனா, ரோஜா, ஜனகராஜ் மற்றும் செந்தில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி இரண்டு பேரை திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று மறைக்கும் சில விஷயங்களை நகைச்சுவையாக செய்து காட்டி இருப்பார். அதிலும் இவர் கிராமத்தில் வசிக்கும் போது ஹவ் இஸ் இட் சூப்பர் என்று செய்யும் சில குறும்புத்தனமான காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும்.

Also read: சூப்பர் ஸ்டார்- லோகேஷ் கூட்டணிக்கு வலு சேர்க்கும் பிரபல இசையமைப்பாளர்.. கடும் போட்டி போடும் தயாரிப்பாளர்கள்

அருணாச்சலம்: சுந்தர் சி இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு அருணாச்சலம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, சௌந்தர்யா, ரம்பா, மனோரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சில சீரியஸான காட்சிகள் இருந்தாலும் அதை இவருடைய பாணியில் காமெடியை வைத்து இந்த படம் முழுக்க நம்மளை ரசிக்கும் படியாக அமைந்திருக்கும்.

குரு சிஷ்யன்: எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு குரு சிஷ்யன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, பிரபு, சீதா, கௌதமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஆங்கிலம் தெரியாமல் இவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பிறகு கௌதமி இவரிடம் பேசும் ஆங்கிலத்திற்கு இவர் பேசி அதை சமாளிக்கும் விதமும் மற்றும் பிரபு உடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியும் நன்றாக இருக்கும்.

Also read: மதம் மாறி நடிக்கும் ரஜினியின் மாஸ்டர் பிளான்.. விடாத சர்ச்சையால் பவர்ஃபுல் கேரக்டர் மூலம் தரும் பதிலடி

மாப்பிள்ளை: ராஜசேகர் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு மாப்பிள்ளை திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, ஸ்ரீவித்யா, அமலா மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் மாமியாரின் கொட்டத்தை அடக்கி அவர் செய்யும் தவறை புரிய வைக்கும் விதமாக இக்கதை அமைந்திருக்கும். அதற்காக இவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் நகைச்சுவையாக இருக்கும்.

தில்லு முல்லு: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு தில்லு முல்லு திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், தேங்காய் சீனிவாசன், நாகேஷ் மற்றும் மாதவி ஆகியோர் நடித்திருப்பார்கள். இதில் இவருடைய வேலையை காப்பாற்றிக் கொள்வதற்காக முதலாளிடம் நாங்கள் இரட்டை சகோதரர்கள் என்று பொய் சொல்லுவார். பின்பு இதை நம்ப வைப்பதற்காக இவர் செய்யும் தில்லு முல்லு தான் இப்படத்தின் கதையாகும். இப்படம் முழுவதுமே ஒரு நகைச்சுவை படமாக தான் இருக்கும்.

Also read: ரஜினியால் வளர முடியாமல் போன 2 ஹீரோக்கள்.. 400 படங்களுக்கு மேல் நடித்தும் பிரயோஜனமில்ல

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்