சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அழகில் மயங்கி காதலைச் சொன்ன ஹீரோக்கள்.. உதவி இயக்குனரை திருமணம் செய்து நிம்மதியை தொலைத்த சிவாஜி பட நடிகை

பொதுவாக சினிமா ஹீரோயின்கள் பலரும் தொழிலதிபர்கள், டாப் ஹீரோக்கள், இயக்குனர்கள் போன்றவர்களை தான் திருமணம் செய்து கொள்வார்கள். அரிதிலும் அரிதாக தான் சிலர் மனதிற்கு பிடித்த சாதாரண நபர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். அப்படி உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்ட சிவாஜி பட நடிகை ஒருவர் இறுதியில் நிம்மதியை தொலைத்து விவாகரத்தை தேடி இருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி போன்ற பலரின் திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நாயகியாக இருந்தவர் தான் நடிகை தேவிகா. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் இவர் உதவி இயக்குனராக இருந்த தேவதாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also read: சிவாஜி சகாப்தம் அழிந்ததை கொண்டாடிய நடிகர்கள்.. மாஸான ரீ- என்ட்ரி கொடுத்து ஆட்டத்தை ஒடுக்கிய நடிகர் திலகம்

இது பலருக்கும் ஆச்சரியம் தான். ஏனென்றால் அவரை திருமணம் செய்து கொள்ள அப்போது பல கதாநாயகர்களும் விரும்பினார்கள். ஆனால் அவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு ஒரு உதவி இயக்குனரை அவர் திருமணம் செய்து கொண்டது பெரும் வியப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த வாழ்க்கை குறுகிய காலத்திலேயே விவாகரத்தில் முடிந்தது.

ஏனென்றால் கணவன், மனைவி இருவருக்கும் பணம் தொடர்பாக அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் தேவிகாவின் நடத்தையிலும் அவருடைய கணவருக்கு சந்தேகம் இருந்ததாம். அது மட்டுமல்லாமல் அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்து போயிருக்கிறது. மற்றொருவர் தான் நடிகை கனகா.

Also read: 3 வருடங்கள் ஓடிய சிவாஜியின் ஒரே படம்.. நடிகர் திலகம் இலங்கையில் செய்த மிகப்பெரிய சாதனை

மேலும் தேவிகாவை வேறொரு ஆணுடன் தவறான கோலத்தில் பார்த்ததாகவும் அவர் கணவர் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இது போன்ற காரணங்களால் குடும்பத்தில் எந்நேரமும் சண்டையும், சச்சரவுமாகவே இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன தேவிகா தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தன் மகளுடன் வாழ ஆரம்பித்திருக்கிறார்.

அந்த வகையில் ஒரு தவறான முடிவு அவரின் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது. அதனாலேயே அவருடைய மகளும் ஆண்கள் மேல் பெரிய அளவில் நம்பிக்கை இல்லாமல் இருந்து வருகிறார். இப்போதும் கூட அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தனிமையிலேயே தன் காலத்தை கழித்து வருகிறார்.

Also read: 18 படங்களில் 10 படம் சூப்பர் ஹிட்.. மகன் பிரபுவை விட சிவாஜியின் லக்கியான ஃப்ரெண்ட்

- Advertisement -

Trending News