ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

இரண்டு அருவருப்பான கேள்விக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்.. நல்லவேளை அடி வாங்காம தப்பித்த நபர்

கமல்ஹாசனின் மூத்த வாரிசான ஸ்ருதிஹாசன் ஆரம்பத்தில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறைய தொடங்கியவுடன் அக்கட தேசத்திற்கு சென்றுவிட்டார். இப்போது மும்பையில் செட்டிலான அவர் தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான வீரசிமா ரெட்டி, வால்டர் வீரய்யா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கமலை போலவே அவரது மகள் ஸ்ருதிஹாசனும் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட அவர் வெளிநாட்டு டாட்டூ கலைஞரை காதலித்து வந்தார்.

Also Read : 37 வயது ஸ்ருதிஹாசனை, 31 வயது தாயிடம் அறிமுகம் செய்த 62 வயது நடிகர்.. என்ன கருமம்டா இது!

இவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. ஆனால் இப்போது இவர்களுக்குள் ஏதோ பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக தனது ரசிகர்களுடன் ஸ்ருதிஹாசன் உரையாடி வருகிறார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சற்றும் தயங்காமல் பதிலளித்து வருகிறார்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் ஸ்ருதிஹாசனிடம் நீங்கள் வெ**ஜினா என்று கேட்டிருந்தார். உடனே வெ**ஜினா என்ற வார்த்தையின் ஸ்பெல்லிங் கரெக்ட்டா எழுதுங்க என அவரை வாயடைக்க செய்து விட்டார் ஸ்ருதிஹாசன். ஏனென்றால் ரசிகர் அந்த வார்த்தையை பிழையாக எழுதி இருந்தார்.

Also Read : இனி இங்க நடிக்க மாட்டேன் என ஓடிய 5 ஹீரோயின்கள்.. அக்கட தேசத்தில் தாத்தா வயது நடிகருடன் ஜோடி போட்ட ஸ்ருதி

அதேபோல் இன்னொரு ரசிகர் உங்களை டேட்டிங் செய்யலாமா என்று கேட்டிருந்தார். அதற்கு சற்றென்று ஸ்ருதிஹாசன் நோ என்று சொல்லிவிட்டார். இவ்வாறு சினிமாவில் உள்ள நடிகைகள் என்றால் பொது சொத்து என்பது போல ரசிகர்கள் சில நேரங்களில் அருவருப்பாகவும், எல்லை மீறியும் நடந்து கொள்கிறார்கள்.

சமீபத்தில் இதுபோன்று தான் சூரரைப் போற்று நடிகை அபர்ணா பாலமுரளிடம் ஒருவர் அருவருப்பாக நடந்து கொண்டார். இதற்கு பல நடிகைகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதேபோல் ஸ்ருதிஹாசன் இடமும் எல்லை மீறி கேட்கும் கேள்விக்கு சரியான பதிலடியை தந்து உள்ளார். ஒருவேளை நேராக இருந்தால் ஸ்ருதிஹாசன் அடிக்கவும் செய்திருப்பார். சமூக வலைத்தளம் வாயிலாக கேள்வி கேட்டதால் அந்த ரசிகர் நல்லவேளை அடிவாங்காமல் தப்பித்துள்ளார்.

Also Read : புலம்பித் தவிக்கும் ஸ்ருதிஹாசன்.. மருந்து கொடுத்து காப்பாற்றுவாரா கமலஹாசன்

- Advertisement -

Trending News