பதான், ஜவானால ஷாருக்கான் க்ரைம் ரேட் ஏறிப்போச்சு.. டங்கி படத்தை டார் டாராக கிழித்த ப்ளூ சட்டை

Dunki-Blue Sattai Maaran: ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டங்கி நேற்று வெளியானது. தொடர்ச்சியாக இரண்டு படங்கள் மூலம் பாக்ஸ் ஆபிஸை திணறவிட்ட பாலிவுட் பாட்ஷா டங்கி மூலம் ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

ஆனால் படம் வெளியான முதல் நாளிலேயே வெறும் 30 கோடியை தான் வசூலித்திருந்தது. மேலும் படத்திற்கான விமர்சனங்களும் கலவையாக தான் கிடைத்தது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் ஷாருக்கானை கூட இவரு விட்டு வைக்கவில்லையா என கேட்க வைத்திருக்கிறது.

அந்த வகையில் ஷாருக்கான் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு லண்டன் போக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால் சட்டபூர்வமாக முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. இதற்கிடையில் அவரின் நண்பர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

Also read: லோகேஷ் குழப்பத்திற்கு முடிவு கட்டிய ஷாருக்கான்.. இது என்னடா தலைவருக்கு வந்த சோதனை

அதன் பிறகு ஷாருக்கான் அனைவரையும் லண்டனுக்கு கொண்டு போய் சேர்த்து விடுகிறேன் என வாக்கு கொடுக்கிறார். இதில் ஷாருக்கான் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை. இதை பற்றி சொன்ன ப்ளூ சட்டை மாறன் ஷாருக்கானுக்காக இந்த படத்தை பார்க்கவில்லை. ஏற்கனவே பதான், ஜவான் மூலம் அவருடைய க்ரைம் ரேட் ஏறிவிட்டது.

ஆனால் இயக்குனரின் முந்தைய படங்கள் ஒரு ஆழமான கருத்தை விதைத்திருந்தது. அதேபோல் இந்த படமும் இருக்குமா? என்று பார்த்தேன் ஆனால் அப்படி இல்லை. கதையும், திரைக்கதையும் அழுத்தமான உணர்வை கொடுக்கவில்லை. அதிலும் எமோஷனல் காட்சிகளில் நடிகர்கள் கதறி அழுதாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

மேலும் லண்டனுக்கு போக ஹீரோவின் நண்பர்கள் ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் அவர்களை விட அதிகமாக படத்தை பார்த்த நாம் தான் கஷ்டப்படுகிறோம். அதிலும் ஹீரோ ஹீரோயின் காதல் காட்சிகள் எல்லாம் பார்க்கும் போது பழைய காதல் கோட்டையை பார்த்த மாதிரி இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியும் வொர்க் அவுட் ஆகவில்லை. மொத்தத்தில் டங்கி ஒரு குப்பை என கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

Also read: 2023 அதிக வசூலை ஈட்டிய டாப் 5 படங்கள்.. பாக்ஸ் ஆபிஸை மிரட்டி விட்ட ஷாருக்கான்

- Advertisement -spot_img

Trending News